தங்கம் எப்போதுமே பாமர மக்களின் கனவு. நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கை. ஆனால், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை வேகம் எடுத்து நகை பிரியர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
காலை ஒரு விலை மாலை ஒரு விலை என்ற ரேஞ்சுக்கு ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1-ம் தேதி விலை அதிகரித்து, 2-ம் தேதி விலை குறைந்த நிலையில், அதன் பின்னர் தொடர்ந்து விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்து தங்கம் விலை சவரனுக்கு ரூ 1,040 குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ 130 குறைந்து, ஒரு கிராம் சுமார் 13,860 க்கும், விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

கோயம்புத்தூர் இன்றைய தங்கம், வெள்ளி விலை
தங்கம் 1 கிராம் விலை 8 கிராம் (1 சவரன்)
- 22 கேரட் ₹13,735 ₹1,09,880
- 24 கேரட் ₹14,984 ₹1,19,872
வெள்ளி விலை நிலவரம்
- 1 கிராம்: ₹255
- 1 கிலோ: ₹2,55,000

