நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு கண். இந்த உலகை பார்த்து ரசிக்க கண்கள் தான் நமக்கு உதவி புரிகின்றன. இப்படிப்பட்ட கண்களில் தற்போது நிறைய பேர் இளம் வயதிலேயே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு காரணம் கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மொபைல் உபயோகத்தை குறைத்து உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தாலே போதுமானதாக இருக்கும். கண்களில் ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்த்து கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதுவும் நமது தென்னிந்திய உணவுகளில் சில கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? ஆம், கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நமது தென்னிந்திய உணவுகளை கொடுக்கக்கூடியது.

தென்னிந்திய உணவுகளுடன் லூடீன், வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது கண்களின் ஆரோக்கியம் மேம்படும். அதுவும் சாம்பாருடன் கீரை, தயிர் சாதத்துடன் பழங்கள், தோசையுடன் சட்னி போன்ற எளிய உணவுகளை உட்கொள்ளும் போது கூட அது கண்களின் பார்வையை பாதுகாப்பதோடு கண்களில் ஏற்படும் சோர்வை குறைக்கிறது.
தோசை

உதடுகளின் நிறம் மாறுகிறதா?.. ‘அந்த’ பாதிப்பாக கூட இருக்கலாம்..!
புதினா சட்னி அல்லது தேங்காய் சட்னி சேர்த்து தோசையுடன் சாப்பிடுவதால் இதில், உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் கண்களில் மேற்பரப்பிற்கு மிகவும் நல்லது. உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினசரி நாம் உண்ணும் உணவுகளுடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்ளுங்கள்.
சாம்பார் சாதம்

முருங்கைக்கீரை பொரியல் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது கண் ஆரோக்கியத்திற்கு தேவையான லூடீன் கிடைக்கிறது. இது விழித்திரையை நீல ஒளியின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதுடன் கண் குறை ஏற்படுவதையும் தடுக்கிறது.
தயிர் சாதம்

மாதுளை அல்லது வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி அதை தயிர்சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதால், இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் கண்களில் ஏற்படும்.
தினமும் 4 சின்ன வெங்காயம்.. எப்படிச் சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?..
தக்காளி சாதம்

பசலைக் கீரை பருப்பு சேர்த்து கடைந்து தக்காளி சாதத்துடன் சாப்பிட்டால் சுவையும் அருமையாக இருக்கும். இந்த காம்பினேஷன் சாப்பிடும் போது நீல ஒளியின் பாதிப்பிலிருந்து கண்களை பாதுகாக்கிறது.
பிரியாணி

கேரட் பச்சடியை பிரியாணி அல்லது வெங்காய பச்சடி யுடன் கேரட் பச்சடி அல்லது வெங்காய பச்சடியை பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடுவதால் வைட்டமின் ஏ மற்றும் ப்ரோபயோடீன்கள் இருப்பதால் கண்களின் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இது உதவி புரிகிறது.
இட்லி சாம்பார்

சாம்பார் சேர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் நெய் கண்களின் ஆரோக்கியத்திற்கு என்றும் இமையாக வைத்து கொள்ள சத்துக்களை வழங்குகிறது. அதுவும் கூடுதலாக இட்லியுடன் சேர்த்து இதனை சாப்பிடும் பொழுது சுவையும் அலாதியாக இருக்கும். எனவே, எப்போதும் இட்லியை தவறாமல் வெஜிடபிள் சாம்பாரை சேர்த்து சாப்பிடுங்கள்.
எலுமிச்சை சாதம்

வேர்க்கடலையை எலுமிச்சை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதில், இருக்கக்கூடிய வைட்டமின் ஈ கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், இப்படி சாப்பிடுவது எலுமிச்சை சாதத்தின் சுவையும் பிரமாதமாக இருக்கும்.
மேலும் கொடுக்கப்பட்ட ஃபுட் காம்பினேஷன் உங்களுக்கு எந்த காம்பினேஷன் மிகவும் பிடிக்கிறதோ அதனையே ட்ரை செய்து சாப்பிடுங்கள் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள்.

