மேஷம்
தைரியத்துடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணவரவு வந்து சேரும். சகோதர வழியில் ஒற்றுமை கூடும்.
ரிஷபம்
பேச்சில் கனிவு அவசியம். குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் வந்து செல்லும். விட்டுக் கொடுத்துச் செல்வது அமைதி தரும்.
மிதுனம்
உற்சாகமான நாள். புதிய வேலை வாய்ப்புகள் கைகூடும். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
கடகம்
செலவுகள் கட்டுக்கடங்காமல் போகலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது இன்று அவசியம்.
சிம்மம்
வருமானம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கன்னி
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு இன்று கிட்டும்.
துலாம்
அதிர்ஷ்டம் நிறைந்த நாள். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. நீண்ட தூர பயணங்களால் லாபம் அடைவீர்கள்.
விருச்சிகம்
வாகனப் பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பொறுமை காக்க வேண்டிய நாளாகும்.
தனுசு
கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரம் செழிக்கும். மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும்.
மகரம்
கடன் தொல்லைகள் குறையும். எதிரிகள் மறைமுகமாகத் தந்த தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கும்பம்
பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு நிம்மதி தரும். பூர்விக சொத்துக்களால் லாபம் உண்டு. கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வரும்.
மீனம்
தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வீட்டைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் உதவி கிடைக்கும்.

