தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன.

முன்னதாக, விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறி இருப்பவர் த்ரிஷா. த்ரிஷா மற்றும் விஜய்க்கு எதிரான கருத்துக்கள் நிறைவு வருகின்றன. ஆனால், இரண்டு பேருமே சைலண்டாக அந்த விஷயத்தை கடக்கிறார்கள்.
இந்த பிரச்சினை வந்ததிலிருந்து திரிஷா என்ன செய்தாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. முக்கியமாக, அவர் வைக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏதேனும் மறைமுகமாக உணர்த்துகிறாரா என்றும் உற்று நோக்குகின்றார்கள். இந்த நிலையில், நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விளக்குகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது.

ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!
முன்னதாக தமிழ் சினிமா குறித்து நம்பகத்தன்மையான தகவல்களை தெரிவிக்கும் சித்ரா லட்சுமணன் பிரபல youtube சேனலில் ரசிகர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விளக்குவதாக வெளியான செய்திகள் உண்மை தான் என்றும், இது தொடர்பாக சில தயாரிப்பாளர்களிடம் பேசினேன். திரிஷா படங்களில் கமிட்டாவது முற்றிலுமாக கைவிட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.

கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!
மேலும், விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழுவதும் கவனம் செலுத்தி வருகிறார். விஜயின் கட்சியில் இணைந்து எதிர்காலத்தில் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட திரிஷா திட்டமிட்டு விட்டாரா என்ற பல கேள்விகளும் தற்போது, சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

