திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள பர்வதமலை, போளூர் அருகே அமைந்துள்ள ஆன்மீகம் மற்றும் மர்மங்கள் நிறைந்த இடம் பருவதமலை. இந்த மலை, ‘தென் கைலாயம்’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த மலை பற்றி சில சுவாரசியமான தகவல்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
மல்லிகார்ஜுனா கோவில்

நினைத்தது நடக்கும்.. மயிலை வீரபத்திரருக்கு ‘இந்த’ மாலையை சாத்துங்கள்..!
கி பி மூன்றாம் நூற்றாண்டில் மலையின் உச்சியில் மல்லிகார்ஜுனா கோவில் கட்டப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4560 அடி உயரத்தில் அமைந்து இருக்கிறது. இங்குள்ள இறைவனை மக்கள் மௌனகுரு என்று அழைப்பார்கள்.
மலை ஏறுவதில் சவால்
இந்த மலையில் உள்ள படிக்கட்டுகள் கடப்பாரை படி என்று அழைக்கப்படும் செங்குத்தான பாதை மிகவும் ஆச்சரியம் ஊட்டுவதாக அமைந்துள்ளது 90 டிகிரி கோணத்தில் இருக்கும். இந்த பாதையில் ஏறுவது ஒரு சிலிர்ப்பான அனுபவம்.

சித்தர்களின் பூமி
இன்றும் பருவத மலையில் பல சித்தர்கள் சூட்சும வடிவில் இந்த மலையில் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. மழையில் தங்கி தியனம் செய்பவருக்கு பலவிதமான நறுமணங்கள் வீசுவதாகவும். சில விசித்திரமான ஒலிகள் கேட்பதாகவும், அனுபவரீதியாக பல கதைகள் இந்த மலைகள் குறித்து சொல்லப்படுகிறது.

பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!
புராண பின்னணி
முன்னதாக ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த ஒரு சிறிய பகுதி விழுந்த இடமே பர்வதமலை என்று கூறப்படுகிறது.
பௌர்ணமி கிரிவலம்

பௌர்ணமி நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த மலையில் வீசும் காற்று உடலுக்கும் மனதிற்கும் மிகுந்த புத்துணர்வை தரக்கூடியதாகவும் உள்ளது.
வீர்ணா மலை
பருவதமலை ஏறும் பாதையில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பகுதி வீர்ணாமலை. இது இந்த மலையின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது. வீரம் மிகுந்தவர்கள் ஏறும் மலை என்பதால், இதற்கு இப்பெயர் கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் தான் இயற்கையான மூலிகைகள் அதிக அளவில் கிடைக்கப்பெறுகின்றன. இங்கு வீசும் காற்றில் மருத்துவ குணங்கள் அதிகம் இருப்பதால், இதில் சுவாசிப்பது நுரையீரலுக்கு நல்லது என்று நம்பப்படுகிறது.

முன்னதாக சிவபெருமான் கைலாயத்திலிருந்து பூமிக்கு வந்த போது தனது முதல் அடியை இந்த மலையில் தான் வைத்தார் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையாகவே இங்கு ஒரு பாறை பகுதியில் அண்ணாமலையார் பாதம் செதுக்கப்பட்டுள்ளது.
ஆசிரமங்கள்
மௌனகுரு மௌன குரு விதோபாநாத ஆசிரமம் கடலடி பகுதியில் அமைந்துள்ளது. மலையேறும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்கும் ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது. பச்சையம்மன் கோவில் மற்றும் ஆசிரமம் மிகவும் பருவத மலையில் பிரபலம். மலை ஏற்றத்தை தொடங்கும் முன் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். இங்கு சப்த முனிகளின் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பருவத மலையில் பயணம் என்பது ஒரு மனிதனின் மனவலிமையும், இறை நம்பிக்கையும் சோதிக்கும் உன்னத பயணமாக கருதப்படுகிறது. செங்குத்தான கடப்பாரை படிக்கட்டுகளில் ஏறி உச்சியில் உள்ள மௌன குருவை தரிசிக்கும் போது ஏறிய களைப்பு நீங்கி ஒரு பேரானந்தம் கிடைக்கப்பெறுகிறது. வீரணாமலையின் மூலிகை காற்றும் அங்குள்ள ஆசிரமங்களின் அமைதியான சூழலும் நம் மன அழுத்தத்தை போக்கி புத்துணர்ச்சியை அளிக்க கூடியதாக அமைகிறது. இயற்கையை போற்றி அதன் மர்மங்களை மதிக்கும் எவருக்கும் பருவதமலை ஒரு வாழ்நாள் அனுபவமாகவே இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மலையேற்றத்தின் போது கவனிக்க வேண்டியவை
செங்குத்தான பாதை (கடப்பாறை படி)
பர்வதமலை ஏறுவது மற்ற மலைகளை விட சவாலானது. குறிப்பாக ‘கடப்பாறை படி’ என்று அழைக்கப்படும் செங்குத்தான பகுதியில் ஏறும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கைகளைப் பலமாகப் பிடித்துக் கொண்டு நிதானமாக ஏற வேண்டும்.
தேவையான பொருட்கள்
மலையில் கடைகள் அதிகம் இருக்காது என்பதால், போதுமான அளவு குடிநீர், எனர்ஜி தரும் பிஸ்கட் அல்லது பழங்கள் எடுத்துச் செல்லுங்கள். ஒரு டார்ச் லைட் (இரவு பயணத்திற்கு) மற்றும் முதலுதவி மருந்துகள் கையில் இருப்பது அவசியம்.
உடல் தகுதி
சுமார் 3 முதல் 5 மணி நேரம் வரை தொடர்ந்து மலை ஏற வேண்டியிருக்கும் என்பதால், மூச்சுத்திணறல் அல்லது இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று செல்வது நல்லது.
பிளாஸ்டிக் தவிர்த்தல்
இது ஒரு புண்ணிய பூமி என்பதால், பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது கவர்களை மலைப்பகுதியில் வீசி எறியாமல் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
பயண நேரம்
கோடை காலங்களில் பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மலையேற்றத்தைத் தொடங்குவது சிறந்தது. பௌர்ணமி நாட்களில் மலையேறுவது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

