மக்களின் ஒரே நம்பிக்கையாக, மக்களில் ஒருவராக களத்தில் நிற்கும் வெற்றித் தலைவர் விஜய் முதல்வராவார் என ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. நான் பிறந்து வளர்ந்த ஊரான திருவெறும்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ‘சொந்த ஊர்க்காரன்’ என்ற உரிமையோடு பங்கேற்று சிறப்புரை ஆற்றினேன்.

ஒருபக்கம் பொருந்தா கூட்டணியை அமைத்துவிட்டு கொள்கை கூட்டணி என்று போலி பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் திமுக, இன்னொருபக்கம் பாஜக-வுடன் மறைமுக கூட்டணி வைத்து சுதந்திரமாகக் கொள்ளையடித்தும் சிறுபான்மையின சகோதரர்களை ஏமாற்றியும் வருகிறது.
இதனால், மக்கள் செல்வாக்கையும் கொள்கையையும் இழந்துவிட்டது திமுக. ஆனால், மக்களுடனான கூட்டணியை மட்டுமே ஏற்று, மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளுடன், மக்களின் ஒரே நம்பிக்கையாக, மக்களில் ஒருவராக களத்தில் நிற்கிறார் வெற்றித் தலைவர் அவர்கள்.

திருச்சி முதல் தமிழ்நாடெங்கும் பண்ணையார் ஆதிக்கமும், வாரிசு அரசியலும் அதிகாரமாகக் கோலோச்ச, சாமானிய மக்களுக்கான அரசியல் அடையாளத்தோடு விரைவில் புதிய சரித்திரம் படைக்கக் காத்திருக்கிறார் கழகத் தலைவர் அவர்கள்.
கோவை அருகே 20 நாட்களாக சுற்றும் சிறுத்தை… வீடியோ போட்டு அறிவுறுத்திய அண்ணாமலை!
திமுக கட்சிக்குள் உள்ள குழப்பம், கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி, செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் ஆதரவு இல்லாதது என கடும் நெருக்கடியில் இருக்கிறார் முதல்வர். இதனால், முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.
நம் கழகத்தின் திருவெறும்பூர் வெற்றி வேட்பாளர் சகோதரர் திரு. நவல்பட்டு விஜி அவர்கள் உறுதியாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப்பெறுவார்.

நம் கழகத் தலைவர் அவர்களுக்கு மக்கள் கொடுத்துவரும் பேராதரவு, மக்களாட்சியில் புதிய வெற்றி வரலாற்றை உருவாக்கப்போகிறது. கழகத் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராக வென்று, அனைவருக்குமான நல்லாட்சியை வழங்கப்போகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

