தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பெரம்பலூர் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை முடித்துவிட்டு கொளத்தூருக்கு சென்ற நிலையில், விஜய்க்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என கூறி காவல்துறையை குற்றம் சாட்டி வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.
விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!
இது குறித்து தமிழக வெற்றி கழக இணை பொது செயலாளர். நிர்மல் குமார் உள்துறை அமைச்சருக்கும், உள்துறை செயலருக்கும் கடிதம் எழுதி இருந்தது குறித்து பேசிய விந்தியா அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சர் உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மத்திய உள்துறை செயல் அஜய்குமார் பல்லா கடந்த 2025 ஜனவரி மாதமே மணிப்பூர் ஆளுநர் ஆகிவிட்டார். தற்போது உள்துறை செயலராக கோவிந்த் மோகன் உள்ளார். அது கூட தெரியாமல் தவெகவினர் இருப்பது குறித்து விமர்சித்து இருந்தார்.
இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!
மேலும், அவர் பேசுகையில் அரசியலுக்கு வந்தவர்கள் இன்னும் பாதுகாப்பு கேட்டு யாருக்கு கடிதம் எழுதுகிறோம் என தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்புக்கு யாரை கேட்க வேண்டும் என்று கூட தெரியவில்லை. எப்படி இப்படிப்பட்டவர்கள் மக்கள் பாதுகாப்பு பற்றி பேசுவார்கள். மக்களுக்கு நல்லாட்சி தருவார்கள். எப்படி மக்களை பாதுகாப்பார்கள் என்ற வகையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார் முதலில் அவர்கள் அரசியலில் ஆ என்ற எழுத்தை கற்றுக்கொண்டு பிறகு அரசியலுக்கு வர சொல்லுங்கள் என்று காட்டமாக விமர்சித்து இருந்தார்.

