வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து மிக்க ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது. இது மாதவிடாய் பிரச்சனையை சரி செய்து கர்ப்பப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்தி செரிமானத்தை அதிகரித்து உடல் எடை குறைக்கவும் இது அற்புதமாக செயல்படுகிறது.
தினமும் ஒரு கீரை.. எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த கீரைகளை சாப்பிட வேண்டும்? முழு விவரம்..!
வாழைப்பூவை இரண்டு வாரங்கள் சமைத்து சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைந்து ரத்த ஓட்டம் சீராகும். இதனால், ரத்த சோகை வராது. பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறு போன்றவற்றிற்கும் இது மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

வேகவைத்த வாழைப்பூ பொரியல் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாகும். இதில், உள்ள வேதிப்பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
வாழைப்பூவின் நன்மைகள்
பெண்களின் ஆரோக்கியம்
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, அதிக ரத்தப்போக்கு, மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
சர்க்கரை நோய் கட்டுப்பாடு
வாழைப்பூவில் உள்ள குளுக்கோஸ், ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல், சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!
செரிமானம்
அதிக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இரத்த சோகை நீக்கம்
இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த சோகையை (Anaemia) குறைத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
சிறுநீரக ஆரோக்கியம்
சிறுநீரகக் கற்களைக் கரைத்து, சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம்
இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து, இதய பாதிப்புகளைத் தடுக்க உதவுகிறது.
மன அழுத்தம்
இதில் உள்ள மெக்னீசியம், மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்துகிறது.

பொதுவாக வாழைப்பூ ஆரோக்கியமானது என்றாலும், அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் பொழுது செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு வயிற்றுக்கோளாறுகள், உப்பசம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். சிலருக்கு ஒவ்வாமை, லேசான கசப்பு தன்மை மற்றும் சமைப்பதற்கு அதிக நேரம் எடுப்பது போன்ற சிரமங்கள் கூட ஏற்படலாம்.
வாழைப்பூவின் பக்க விளைவுகள்
செரிமானப் பிரச்சினைகள்
அதிகப்படியான நார்ச்சத்து (Fiber) உள்ளதால், அதிக அளவு சாப்பிடும்போது வயிற்று வலி, வாயு அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
ஒவ்வாமை
அரிதாக, வாழைப் பழம் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, வாழைப்பூவும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
கசப்புத் தன்மை
வாழைப்பூவின் உட்பகுதி லேசான கசப்புத் தன்மையுடன் இருப்பதால், சிலருக்கு அதன் சுவை பிடிக்காமல் போகலாம்.
சமைப்பதில் சிரமம்
இதனை சுத்தம் செய்து சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்கும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

