தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் முக்கிய மாற்றம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த மாணிக்கம் தாகூர் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்த முடிவு, திமுக கூட்டணிக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிருப்தி நிலையை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஆட்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி வந்தார். அதோடு, மதுரை வடக்கு உள்ளிட்ட சில தொகுதிகளில் திமுகவின் செயல்பாடுகள் குறித்தும் அவர் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!
இந்த விவகாரம் தொடர்பாக, செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் கூட்டணி நிலைப்பாடு உறுதியானதைத் தொடர்ந்து, வெளிப்படையான கருத்து தெரிவிப்பதில் ஒரு மௌனம் நிலவியது.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தாமதமாகி வருவது, மேலும் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி ஆகிய காரணங்களால் மாணிக்கம் தாகூர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனுடன் தொடர்புடைய வகையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் தொகுதி தேர்வு விவகாரம் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம், தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணிக்குள் உள்ள உட்கட்டமைப்பு சவால்களை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

