கோவை குனியமுத்தூர் – பாலக்காடு சாலையில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் நேற்று காலை முதலே கள்ளச்சந்தையில் மது விற்பனை தாராளமாக நடைபெற்று உள்ளது. மதுக்கடைகள் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டு இருந்தாலும், குறிப்பிட்ட அந்த பாரின் உட்புறம் மற்றும் மறைவான இடங்களில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
உங்களில் ஒருவனாக, சகோதரனாக பணியாற்றுவேன்.. கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!
புனிதமான தினத்தில், அதுவும் பிரதான சாலையில் பகிரங்கமாகச் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்திற்குப் பொதுமக்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இருப்பினும், தகவல் அளித்து நீண்ட நேரமாகியும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மது விற்பனை மற்றும் கடத்தலைக் கண்காணிக்கப் பல சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும்,ஒரு முக்கியச் சாலையில் பகிரங்கமாக மது விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

