2019-ஆம் ஆண்டு காளிதாஸ் திரைப்படம் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், தற்போது அதன் தொடர்ச்சியாக காளிதாஸ் 2 படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் பரத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், அஜய் கார்த்திக், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும், பூவே உனக்காக படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சங்கீதா, இந்தப் படத்தில் முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் பரத் தனது திரையுலக பயணத்தைப் பற்றி திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், “எதுவும் சாதிக்காமல் இருந்தவர்களே சில நேரங்களில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டார்கள் என்று சிலர் என்னிடம் கூறுவார்கள். அப்படிச் சொல்லப்படும் தருணங்களில் மனதில் வேதனை ஏற்படும். ஆனால், அது அவர்களுடைய அதிர்ஷ்டம் மற்றும் விதி என்று நினைத்துக்கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.
விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!
தொடர்ந்து அவர், “என் படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வரவேற்காததற்கு, நான் கதைகளை தேர்வு செய்த விதத்தில் ஏற்பட்ட தவறுகளும் காரணமாக இருக்கலாம். இருந்தாலும், நான் இந்த போட்டியில் இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

மேலும், தனது எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் பேசிய அவர், “ஒருநாள் சஞ்சு சாம்சன் போல ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, இன்னும் உயர்ந்த நிலையை அடைவேன். என் திரையுலக மறுபிரவேசத்திற்காக ரசிகர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று உறுதியாக கூறினார்.

