2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் மற்றும் தவெக தலைவர் தமிழக வெற்றி கழகத்தில் இம்முறை போட்டியிட உள்ளதால், சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டி என்று அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், விஜய்யின் முன்னாள் மேனேஜரான பி.டி. செல்வகுமார் விஜய்யை விட்டு வெளியே வந்த நிலையில், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். விஜய்யுடன் 27 வருஷம் பயணித்து அவரிடம் கற்றுக் கொண்டது என்னவென்றால் நம்பிக்கையான நேரத்தில் விட்டுவிட்டு அப்படியே ஓடிவிடுவார் என பிடி செல்வகுமார் பேசியுள்ளது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
கலைஞர் வழியில் இறங்கிட்டாரே ப்பா.. தண்டவாளத்தில் படுத்து மிரட்டிய வில்லன் நடிகர்..! (வீடியோ)
தொடர்ந்து பல பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் விஜய் பற்றிய ரகசியங்களை வெளியிடுகிறேன் என்ற பெயரில் விஜயை அட்டாக் செய்து வருகிறார். முன்னாள் மேனேஜர் ஆன பீடி செல்வகுமார்.

விஜய் செயலில் ஜீரோ நிஜத்தில் ஹீரோ என பேசிவிட்டு அய்யய்யோ தப்பா பேசிட்டோமே என புரிந்து கொண்ட இவர், விஜய் நிஜத்திலும் ஜீரோ என பத்திரிகையாளர் சந்திப்பில் பிடி செல்வகுமார் பேசிய வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. 27 வருடமாக அவரது காசுல சாப்பிட்ட வாய் அது நன்றி மறக்கவில்லை என விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

