சமிப காலமாக பெண்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், சிலருக்கு முகத்தில் கை, கால்களில் தேவையற்ற முடிகள் வளர்ந்திருக்கும். இதனால் பெரும்பாலானோருக்கு அழகை கெடுக்கும் விதத்தில் அமைகிறது.
எண்ணெய் சருமமா?.. எண்ணெய் பசை முகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரகசியம் இதோ..!
இது பெண்களுக்கு ஒரு சில ஹார்மோன் மாற்றங்களாலும் ஏற்படும் என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது. வழக்கத்திற்கு அதிகமான முடி வளர்ச்சி இருப்பதால் அழகை கெடுக்கும் விதமாகவும் அமைந்து விடுகிறது. இதற்கு தீர்வு காண ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்ததாக கருதப்படுகிறது.

மூக்கின் கீழ் பகுதி, தாடையின் கீழ் பகுதியில் நெற்றியில் கூட சிலருக்கு ரோமங்கள் இருக்கிறது. அதைப்போல கை, கால்களிலும் அதிகமாக முடி வளர்ந்து இருக்கும். பலரும் இதற்கு பல வகையான கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதற்கு மாறான இயற்கையான வழிமுறைகளும் இருக்கின்றன.
தேவையற்ற முடிகளை நீக்கும் இயற்கை வழிகள்
- கடலை மாவு
- கஸ்தூரி மஞ்சள்
- அரிசி மாவு
- பால்
தலா ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் தேவையான அளவு பால் சேர்த்து முகத்தில் முடி உள்ள இடங்களில் தடவி ஒரு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சிலருக்கு பால் ஒவ்வாமை ஏற்படுத்தும். அவர்கள் பாலுக்கு பதிலாக தயிரை கூட சேர்க்கலாம். இந்த கலவையை வாரத்திற்கு குறைந்து மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள முடி படிப்படியாக உதிரும்.

நீண்ட கூந்தல் வேண்டுமா?.. முடி கொட்டுவதை தடுத்து கூந்தலை வளர்க்கும் வெந்தயம்..!
- கோதுமை மாவு & நெய் 2 ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் 1 ஸ்பூன் நெய் கலந்து பூனை முடி மற்றும் தேவையற்ற முடிகளை நீக்கலாம்.
- வல்லாரை முடி வளர்ச்சியை சீராக்க வல்லாரை போன்ற மூலிகைகளை பயன்படுத்தலாம்.
- மஞ்சள் மற்றும் பால் கஸ்தூரி மஞ்சளை பாலுடன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். நன்றாக உலர்ந்த பின் தேய்த்துக் கழுவினால் முடி வளர்ச்சி படிப்படியாகக் குறையும்.
- சர்க்கரை மற்றும் எலுமிச்சை இது ஒரு எளிய மற்றும் வலி இல்லாத இயற்கை முறை.
- பொன்னாதரம் பொடி இந்த ஆயுர்வேதக் கல் தேவையற்ற முடிகளை அகற்றி, அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.
- கடலை மாவு பேக் கடலை மாவுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து வரலாம். இது முடியை நீக்குவதுடன் சருமத்திற்குப் பொலிவையும் தரும்.
- எலுமிச்சை மற்றும் தேன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையைத் தடவி 15 நிமிடம் கழித்து மசாஜ் செய்து கழுவினால் தேவையற்ற முடிகள் உதிரத் தொடங்கும்.
- சர்க்கரை ஸ்க்ரப் சர்க்கரையைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து எலுமிச்சை சாறு சேர்த்து சூடுபடுத்தி ‘நேச்சுரல் ஸ்க்ரப்’ போலப் பயன்படுத்தினால் மெல்லிய முடிகள் எளிதில் நீங்கும்.
- பப்பாளி மற்றும் மஞ்சள் பப்பாளியில் உள்ள ‘பாப்பைன்’ நொதி முடிகளின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும். பப்பாளி விழுதை மஞ்சளுடன் கலந்து பயன்படுத்தலாம்.

