தண்டாவளத்தில் தலையை வைத்து நடிகர் மன்சூர் அலிகான் படுத்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலி கான் தனது இந்திய ஜனதா கட்சி சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அவர் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், லால்குடி தொகுதிக்குட்பட்ட கல்லக்குடி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அவர் செய்த செயல் கவனத்தை ஈர்த்தது.
கல்லக்குடி ரெயில் நிலைய தண்டவாளத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஒருகாலத்தில் போராட்டத்தின் ஒரு பகுதியாக படுத்திருந்த இடத்தில், மன்சூர் அலிகான் சில நிமிடங்கள் படுத்திருந்தார்.
துக்கம் தாளாமல் சென்னை அணி ஜெர்சிக்கு முத்தமிட்ட RR வீரர் ஜடேஜா.. வைரலாகும் வீடியோ!
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கல்லக்குடி ரெயில் நிலையம் ஒரு வரலாற்றுச் சின்னம். முத்தமிழறிஞர் கலைஞர் படுத்திருந்த அந்த தண்டவாளத்தில் நானும் படுத்து பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இன்று காலை ரெயில் போக்குவரத்து இல்லாத நேரத்தில் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்,” என்று தெரிவித்தார்.

மேலும், “லால்குடி தொகுதி மக்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட வரலாற்று பெருமை கொண்ட தொகுதியில் போட்டியிடுவது எனக்கு பெருமை அளிக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவலான பேசுபொருளாக மாறியுள்ளது.

