தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடக்க உள்ளது. திமுக பல கட்சிகளுடனும் அதிமுக சில கட்சிகளுடன் தவெக தனித்தும் இந்த தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத சப்ரைசாக இயக்குனர் சுந்தர் சி யும் இந்த தேர்தல் களத்தில் களமிறங்க இருக்கிறார்.
அதாவது, சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கவிருக்கிறார். இந்த தொகுதி அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உள்ளது. எனவே, இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடவிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, அந்த தொகுதியில் திமுக சார்பில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் களமிறங்க இருக்கிறார். எனவே அவரை தாண்டி சுந்தர் சி வெற்றி பெருவது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் எதார்த்தம். எனவே, அவர் தடைகளை வெல்வாரா இல்லை டெபாசிட் இழப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆரம்பமே இப்படியா?.. அந்த நிபந்தனையால் பெற்றோரிடம் மல்லுக்கட்டிய மிருணாள் தாகூர்..!
அவர் தேர்தலில் களவிறங்குவது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட் தான் தேவையில்லாமல் இறங்கி பெயரை கடித்துக்கொள்ளாமல் இருந்தால் சரி என்பது ரசிகர்களின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சோசியல் மீடியாவில் புதிதாக அதிகாரப்பூர்வமான அக்கவுண்ட்டை ஆரம்பித்து வீடியோவையும் போஸ்ட் செய்திருந்தார். அந்த வீடியோவில், இத்தனை வருடங்கள் உங்களை இயக்குனராக நடிகராக தயாரிப்பாளராக சந்தோஷப்படுத்தி இருப்பதாக நம்புகிறேன்.
இப்போது, அரசியலும் இறங்கி இருக்கிறேன். மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எனக்கு உங்கள் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.
அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் ஆர்த்தி ரவி சோசியல் மீடியா உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன் அண்ணா. உங்கள் புதிய அவதாரம் எனக்கு ஆச்சரியம் கொடுக்கிறது. எப்போதும் வெற்றி தான் என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

