கோலிவுட் சினிமாவில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோ ஆனவர் நடிகர் சூரி. மதுரையைச் சேர்ந்த சூரி, ஆரம்பத்தில் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 2009-ல் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் வரும் ‘பரோட்டா’ காமெடி இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. அதன்பிறகு ‘பரோட்டா சூரி’ என்று அழைக்கப்படலானார்.
தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ போன்ற படங்கள் மிகப்பிரபலமடைந்தது.

ஆரம்பமே இப்படியா?.. அந்த நிபந்தனையால் பெற்றோரிடம் மல்லுக்கட்டிய மிருணாள் தாகூர்..!
இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ (பாகம் 1) படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகி, தனது யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார். தற்போது, அவர் ஹீரோவாக நடிக்கும் ஏழாவது படம் குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

130 கோடி பட்ஜெட்.. 90% ரெக்கவரி.. ரிலீஸுக்கு முன் ‘கருப்பு’ படத்தின் ப்ரீ-பிசினஸ் ரிப்போர்ட்..!
அயலான் படம் பெரிய அளவில் வரவேற்ப்பை பெறாத நிலையில், ரவிக்குமாரின் முந்தைய படமான இன்று நேற்று நாளை படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒன்று. சூரி மற்றும் ரவிக்குமார் கூட்டணியில் இந்த படத்தினை மைதிலி நிறுவனம் தயாரிக்கிறது. Blood Followed The Flood என போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனால், வெள்ளத்தை மையமாக வைத்த கதையாக இது இருக்கும் என யூகிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அனைவராலும் மறக்க முடியாது. அதனை மையப்படுத்தி தான் இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளார்களாம். அதை பிரதிபலிக்கும் வகையில், இந்த படத்திற்கான அறிவிப்பு போஸ்டரும் சமீபத்தில் வெளியானது.

மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!
இந்நிலையில், சூரியுடன் இணைந்து நடிகை மமிதா பைஜூ நடிக்கப் போவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஆனால், இது எதுவும் உறுதியான தகவலாக இல்லை என்பது குறிப்பிடதக்கது. மமிதா பைஜூ நடிப்பில் அடுத்ததாக, ஜனநாயகன், கர, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், இரண்டு வானம் உள்ளிட்ட திரைப் படங்களில் வெளியிக இருக்கிறது.

