சமீபகாலமாக நிறைய பேர் தினசரி சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முதுகு வலி. இந்த முதுகு வலியானது ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கு தற்போதைய பணியிட சூழல் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. அதில், சிலர் நீண்ட நேரம் உட்கார்ந்தவாறு இன்னும் சிலர் நீண்ட நேரம் நீண்டவாறு வேலை செய்கின்றனர். இவ்வாறு செய்வதால், முதலில் சந்திப்பது முதுகு வலியாகத்தான் இருக்கும்.

இது தவிர, முதுகு வலியால் பெண்கள் அதிகம் சிரமப்படுவதுண்டு. குறிப்பாக, உடல் பருமன் அதிகமாக இருந்தால், அத்தகையவர்களுக்கு, கண்டிப்பாக முதுகுவலி அதிகமாக இருக்கும். இது தவிர வாய்வு தொல்லையாலும், முதுகு வலியை சிலர் சந்திக்கின்றனர்.
இப்படி சந்திக்கும் முதுகு வலியை ஒருபோதும் நீங்கள் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். எனில், இந்த முதுகு வலியும் மாரடிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

முதுகு வலி எப்படி மாரடைப்பில் அறிகுறியாக அமைகிறது
இதயத்தின் பின்புறத்தில் அட்டாக் வரும்போது, அப்போது முதுகு வலியின் மூலம் அறிகுறி தெரியலாம். எல்லா முதுகு வலியும் மாரடைப்பு என்று சொல்லப்படுவதில்லை. மேல் முதுகு பகுதி அதாவது இருதயம் இதற்கு அப்படியே பின்புறத்தில் வலியை சந்தித்தால் சந்தேக படலாம்.
அதேபோல், 40 வயதை தாண்டியவர்கள் ரத்த சர்க்கரை அழுத்தம், கொலஸ்ட்ரால், புகை பிடிக்கும் பழக்கம் போன்றவற்றால் வலியை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. அடிக்கடி உங்களுக்கு முதுகு வலித்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.

தாம்பத்திய உறவில் சிக்கலா?.. பாலில் இதை கலந்து குடித்தால் கிடைக்கும் அதிரடி மாற்றங்கள்..!
உடனடியாக உதவிக்கு அழைக்கவும்
முதலில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழையுங்கள் அல்லது அருகில் உள்ளவர்களை உதவிக்கு கூப்பிடுங்கள். நீங்களாகவே வாகனத்தை ஓட்டிச் செல்ல முயற்சிக்காதீர்கள்.
ஓய்வான நிலையில் அமர வைக்கவும்
- பாதிக்கப்பட்டவரை தரையில் அமர வைத்து, சுவரில் சாய்ந்தபடி கால்களை மடக்கச் சொல்லுங்கள் (W-position). இது இதயத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும்.
- இறுக்கமான ஆடைகளை (சட்டை பட்டன், பெல்ட்) தளர்த்தி விடுங்கள்.

ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரை
நோயாளிக்கு ஆஸ்பிரின் அலர்ஜி இல்லை என்றால், ஒரு 325mg ஆஸ்பிரின் மாத்திரையை மெல்லச் சொல்லலாம். இது ரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுத்து, இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
நைட்ரோகிளிசரின் (Nitroglycerin)
ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்தால் மட்டும் நோயாளி ஏற்கனவே இதய நோயாளி மற்றும் மருத்துவர் அவருக்கு Sorbitrate போன்ற மாத்திரைகளை பரிந்துரைத்திருந்தால், ஒரு மாத்திரையை நாக்கிற்கு அடியில் வைக்கலாம்.
இளமையா இருக்கணுமா?.. நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் 5 ஆச்சரியமான மாற்றங்கள்..!
சிபிஆர் (CPR) – மயக்கமடைந்தால் மட்டும்
நோயாளி மூச்சு விடாமல் மயக்கமடைந்தால் மட்டுமே CPR (Cardiopulmonary Resuscitation) செய்ய வேண்டும். மார்பின் நடுப்பகுதியில் கைகளை வைத்து வேகமாக அழுத்த வேண்டும்.

முக்கிய குறிப்பு
மாரடைப்பு ஏற்பட்ட முதல் ஒரு மணிநேரம் “தங்க நேரம்” (Golden Hour) எனப்படும். இந்த நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை உயிரைக் காப்பாற்ற 80% வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே, முதுகு வலி அல்லது நெஞ்சு வலியுடன் அதிக வியர்வை இருந்தால் வீட்டு வைத்தியம் பார்க்காமல் உடனே மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

