எத்தனை முனை போட்டி வந்தாலும் மக்கள் இன்று திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுக ஆட்சி வரவேண்டும் என்று எண்ணுகிறார்கள் அதிமுக கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றகூடிய வாக்குறுதிகள்.
அவிநாசி அத்திக்கடவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முன்னாள் அமைச்சரும், திருப்பூர் வடக்கு அதிமுக வேட்பாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களுக்கு அதிமுக தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், புதிய பேருந்து நிலையம், பாண்டியன் நகர், போயம்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிமுக மாநகர மாவட்ட இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் கனகராஜ் ஆகியோர் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுகவில் திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளராக என்ன அதிமுக பொதுச்செயலாளர் புரட்சிதமிழர். எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் வேட்பாளராக அறிவித்துள்ளார்/
அனைத்து வேட்பாளர்களையும் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார், இந்த வெற்றிக் கூட்டணி வருகின்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அமைப்போம், கோவை விமான நிலையத்திலிருந்து நேரடியாக கொண்டத்துக்காளியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளேன், இங்கு அதிமுக தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர்.
மக்கள் எழுச்சியோடு இருக்கின்றனர், எத்தனை முனை போட்டி வந்தாலும் மக்கள் இன்று திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுக ஆட்சி வரவேண்டும் என்று எண்ணுகிறார்கள், அந்த வகையில் நாங்கள் அபார வெற்றி பெறுவோம், எங்கள் கூட்டணி வலுமையாக உள்ளது, மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது, மக்களுக்கான கூட்டணியாக உள்ளது என்பதால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றும், அதிமுக தான் முழுமையாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
எங்கள் குடும்பத்தினர் அவமானப்படுத்தப்பட்டபோது அமைதி காத்தது ஏன்?.. விஜய்யை சாடிய சீமான்..!
வேறு எந்த கட்சியும் முழுமையாக அறிவிக்கவில்லை, அதிமுக கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றகூடிய வாக்குறுதிகள், மக்கள் அதிமுக வாக்குறுதிகளை நம்புவார்கள், கடந்த காலங்களில் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியது அதிமுக அரசு என்றும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் எழுச்சியோடு உள்ளது.
அதுவே எங்களுக்கு பெரிய வெற்றியாக அமையும், ஆகவே கடந்த முறை வெற்றி பெற்றதை விட இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும், திருப்பூர் வடக்கு பகுதியில் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேட்டி அளித்தார். முன்னதாக சாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு வாழ்த்துக்களை கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

