கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு எண்ணெய் கடையில், பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருமத்தம்பட்டி- அன்னூர் ரோட்டில், தண்ணீர் பந்தல் பிரிவு பாலு என்பவருக்குச் சொந்தமான எண்ணெய் ஆட்டி விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இன்று மாலை கடையில் இருந்து அருகே உள்ள கடைக்கு பாலு சென்றுள்ளார்.
காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!
அப்போது கடைக்கு தொப்பி அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர், கடையின் முன்னாள் இருந்த ஸ்டூலில் சிறிது நேரம் அமிர்தம் கொண்டு செல்போனில் பேசுவது போல் கடையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட அவர் மின்னல் வேகத்தில் கல்லாவிலிருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை அள்ளிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சூழலில் கடை உரிமையாளர் பாலு சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்து கல்லாவைப் பார்த்த போது, பணம் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, தொப்பி அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர் லாவகமாகப் பணத்தைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரங்கேறியுள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடிப் பிடிக்க சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

