உங்கள் உடலின் வெப்பநிலையை சீராக்கி தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு, தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் ஒரு மாலை அதிசய மாலை ஸ்படிக மாலை நம் மனதில் ஏழாம் அறிவை உயிர் பெற செய்கிறது என்பது மிகைஆகாது.
Table of Contents

கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டையா?.. பிரிந்த தம்பதியினரை ஒன்று சேர்க்கும் உத்தரகோசமங்கை..!
ஸ்படிக மாலை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும் குளிர்ச்சியான உடல்நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் இதை அணியலாம். ஸ்படிக மாலையைப் பராமரிக்கும் மற்றும் சுத்தப்படுத்தும் முறைகள் ஸ்படிக மாலை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது என்பதால், அதனைத் தொடர்ந்து சுத்தப்படுத்துவது அதன் சக்தியைத் தக்கவைக்க உதவும்.
சுத்தம் செய்யும் எளிய வழிமுறைகள்

பன்னீர் அல்லது கங்கை நீர்
- மாலையை ஒரு பாத்திரத்தில் வைத்து சுத்தமான பன்னீர் அல்லது கங்கை நீரால் அபிஷேகம் செய்யலாம். இது ஆன்மீக ரீதியாக மாலையைத் தூய்மைப்படுத்தும்.
கல் உப்பு நீர்
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் சிறிது கல் உப்பைக் கரைத்து, மாலையை சில நிமிடங்கள் அதில் ஊறவைத்து பின் சாதாரண நீரில் கழுவலாம். (இது எதிர்மறை ஆற்றலை நீக்க உதவும்).
பசு பால்
- அவ்வப்போது காய்ச்சாத பசு பாலில் மாலையை நனைத்து எடுத்து, பின் தூய நீரால் கழுவுவது ஸ்படிகத்திற்கு மேலும் பொலிவைத் தரும்.

எதிர்மறை சக்திகள் விலக.. நினைத்தது நிறைவேற முருகனை வழிபடும் முறைகள்..!
நிலவொளி
- பௌர்ணமி அன்று இரவு நிலவொளி படும்படி ஸ்படிக மாலையை வைப்பது அதன் ஆற்றலை (Vibrations) மீண்டும் அதிகரிக்கச் செய்யும்.
ஸ்படிக மாலை கோர்க்கும் முறை
ருத்ராட்சமாக இருந்தாலும், இதனுள் சேர்க்கக்கூடாது. தனி தனியாக அணிந்து கொள்ளலாம். தரமற்ற ஸ்படிக மாலையாக கோர்க்கக்கூடாது. ஸ்படிகத்தை நேரடியாகவோ வெள்ளி அல்லது தங்கத்துடன் கோர்த்து அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிக மாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம்.
கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்
சுடுநீர் தவிர்த்தல்
- ஸ்படிக மாலையைச் சுத்தப்படுத்த மிகவும் சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது; இது கல்லில் விரிசலை ஏற்படுத்தலாம்.

ரசாயனங்கள் வேண்டாம்
- சோப்பு அல்லது இதர ரசாயனப் பொருட்களைக் கொண்டு ஸ்படிகத்தைச் சுத்தம் செய்யக்கூடாது.
பிறர் தொடாமல் பார்த்தல்
- உங்கள் ஸ்படிக மாலையைப் பிறர் தொடாமல் இருப்பது அதன் சக்தியை உங்களுக்கு மட்டுமே நிலைக்கச் செய்யும்.
படிக மணி மாலை அணிவதால் ஏற்படும் பயன்கள்
மனிதர்களாகிய நாம் நாளொன்றுக்கு உள்வாங்கும் சுவாசத்தின் எண்ணிக்கை சராசரியாக 21,600 முறை. ஆனால், இன்றைய பரப்பளவு மிகுந்த உலகில் சுமார் 30,000 வரை விடுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஸ்படிக மணி ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றனர். தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை தெளிவான அறிவு தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்துகிறது.

ஸ்படிக மாலையின் தரத்தை கண்டறிதல்
ஸ்படிகம் மாலைகள் மொத்தம் 10 விதமான தரங்களில் கிடைக்கிறது ஸ்படிகமாலையில் கை வைத்து விடும் ஒருவித குளிர்ச்சியை உணர்ந்தால், அது நல்ல உயர் தர ஸ்படிக மாலை ஆகும். இந்த உயர் வகை ஸ்படிக மாலையை நீரில் போட்டால், ஸ்படிகம் கண்ணுக்கு தெரியாது. நீரோடு நீராக ஒன்று இருக்கும். பார்த்துக் கொண்டே இருக்க செய்யும் வசீகரத்தன்மை ஸ்படிகத்திற்கு உண்டு.

ஆன்மீகத்தில் ஸ்படிகம்
ஆன்மீகத்தில் ஸ்படிகம் மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது. சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜைக்கும்போது அபரிமிதமான ஈர்ப்பு சக்தி ஏற்படும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்வது நல்ல பலனையும் தரும். ஸ்படிகத்தில் மிக சக்தி வாய்ந்தது மகா மேரு ஸ்படிகம். இந்த மகாமேரு ஸ்படிகத்தை வெள்ளி அல்லது தாமிர தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து அபிஷேகம் செய்து வந்தால் சாகல செல்வத்துடன் லட்சுமி கடாட்சமும் சேரும் என்பது ஐதீகம்.

