கோவை, லாலி ரோடு பகுதியில் வசிக்கும் 59 வயது முதியவர் அமரேசன், தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். வீரகேரளம் பகுதியில் தனது மனைவி சக்திகனி பெயரில் கடந்த 2011 முதல் சட்டப்பூர்வமாக அனுபவத்தில் உள்ள 1,225 சதுரடி நிலத்தை, பில்டஜா (Buildaza) நிறுவனத்தைச் சேர்ந்த முகமது குதூப், அப்துல் ரகுமான், இக்பால் மற்றும் அவர்களது கூட்டாளிகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க பார்த்து உள்ளனர்.
அமரேசன் தனது மகனுக்கு தான செட்டில்மென்ட் செய்ய முயன்ற போது தான், வில்லங்கச் சான்றிதழில் பழைய உரிமையாளர்களின் வாரிசுகளை வைத்து 2.96 ஏக்கர் நிலத்தையும் வளைத்துப் போட்டு, இவரது வீட்டையும் வழியையும் சேர்த்து ஒரு ‘விடுதலைப் பத்திரமாக’ மோசடி பதிவு செய்து இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்து விசாரணை நிலுவையில் இருந்த போதே, அதிகார பலம் மற்றும் பண பலத்தைக் காட்டி கடந்த மார்ச் 11-ஆம் தேதி முதற்கட்டமாக மிரட்டல் விடுத்த அந்த கும்பல், “எங்களிடம் காசு இருக்கிறது, எதையும் விலைக்கு வாங்குவோம்” என மிரட்டல் விடுத்து ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!
இதை அடுத்த கடந்த மார்ச் 21-ஆம் தேதி இரவு சுமார் 7.50 மணி அளவில், சினிமா பாணியில் TN 37 CS 1462 எண்ணுள்ள ஜே.சி.பி இயந்திரத்துடன் ஒரு பெரிய கூலிப்படையே அமரேசனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளது. ஜெயக்குமார் மற்றும் ஹரி தலைமையிலான அந்த கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்க முயன்றதுடன், அதைத் தடுக்க முயன்ற அமரேசனை கொலை செய்யவும் துணிந்து உள்ளது.
இந்தத் தள்ளுமுள்ளுவில் படுகாயம் அடைந்த முதியவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜே.சி.பி வாகனத்தின் தடயங்கள் மற்றும் கூலிப்படையினர் போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை கையில் வைத்து உள்ள அமரேசன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தட்டுப்பாடுக்கு இதுதான் காரணமா?.. ரகசிய இடத்தில் பதுக்கப்பட்ட 200 சிலிண்டர்கள் பறிமுதல்..!
இந்தப் புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட பின்னரும் வழக்கு பதிவு செய்யப்படாமல் வடவள்ளி காவல்துறையினர் காலம் தாழ்த்தி வருவது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது. மேலும் இது தொடர்பாக மாவட்ட காவல்துறை ஆணையரை சந்தித்து மனு கொடுக்கவும் இருப்பதாக தெரிவித்தனர்.

