இன்னைக்கு உங்க வீட்ல சப்பாத்தி இல்லனா பூரி செய்யறதுக்கு பிளான் பண்ணி இருக்கீங்களா? அதுக்கு ஒரு அட்டகாசமான சைடிஷ் செஞ்சு கொடுக்கணும்னு நினைக்கிறீங்கனா? அப்படின்னா, வீட்ல முட்டை இருந்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் முட்டை புளிக்குழம்பு செய்து கொடுங்க. சிக்கன் அல்லது மட்டன் வாங்க முடியாத சூழ்நிலையில், இந்த ஸ்டைலிஷ் முட்டை கிரேவியை செஞ்ச இது வேற லேவல் பெட்டராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- கடலை எண்ணெய் ஒரு டீஸ்பூன்
- கருவேப்பிலை ஒரு கொத்து
- பச்சை மிளகாய் 4
- வேக வைத்த முட்டை நாலு
- உப்பு கால் டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன்
- மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
குழம்பு வைக்க
- கடலை எண்ணெய் இரண்டு டீஸ்பூன்
- வெந்தயம் கால் டீஸ்பூன்
- கடுகு கால் டீஸ்பூன்
- சீரகம் அரை டீஸ்பூன்
- கருவேப்பிலை இரண்டு கொத்து
- வர மிளகாய் இரண்டு பச்சை மிளகாய்
- 4 பொடியாக நறுக்கிய இரண்டு கப் வெங்காயம்
- இஞ்சி பூண்டு விழுது
- 2 டீஸ்பூன்
- தக்காளி ஒரு கப் நறுக்கியது
- உப்பு ஒரு டீஸ்பூன்
- மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
- தனியாத்தூள் ரெண்டு தேக்கரண்டி
- கரம் மசாலா அரை டீஸ்பூன்
- நெல்லிக்காய் அளவு புளி ஒன்னு
- தண்ணீர் ரெண்டு கப்
- சர்க்கரை கால் டீஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
செய்முறை

STEP 1: முதலில் முட்டையை நன்றாக வேக வைத்து தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு முள்கரண்டியை எடுத்து வேகவைத்த முட்டைகளின் மேல் துளைகளை போடவும். அப்போதுதான் மசாலா முட்டைக்குள் நன்றாக இறங்கும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
1 கப் வெங்காயம் இருந்தா போதும்.. அவசர சமையலுக்கு ஏற்ற ருசியான சட்னி..!
STEP 2: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில், கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். பின்னர், துளையிட்ட முட்டைகளையும் உப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் அப்படியே காத்திருக்கும். முட்டைகளின் வெளிப்பகுதி பொன்னிறமாக மாறி மொறுமொறுப்பாகும் வரை அப்படியே விடவும். ஒரு நிமிடம் கழித்து முட்டைகளை திருப்பி போட்டு அனைத்து பக்கங்களும் லேசாகவும் மொறுமொறுப்பாக மாறும் வரை வறுக்கவும்.
STEP 3: பின்னர் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து வருத்த முட்டைகளை ஒரு தட்டிற்கு மாற்றி தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் அதே வட சட்டியில் இன்னும் சிறிது எண்ணெய் சேர்க்கவும். வெந்தயத்தை சேர்க்கவும். கடுகு சீரகம், கருவேப்பிலை, வரமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
STEP 4: பின்னர் இஞ்சி பூண்டு விழுதை அதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் தக்காளி, உப்பு சேர்த்து அனைத்தும் ஒன்றாக கலங்குமாறு நன்றாக கலக்கவும். பாத்திரத்தை மூடி குழம்பை மிதமான தீயில் சும்மர் பத்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
STEP 5: பின் மசாலா பொருட்களை சேர்த்து கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை விடவும். குழம்பு கொதித்து கொண்டிருக்கும் பொழுது புளியை வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து இருக்கவும். புளியை பிழிந்து அதன் சாற்றை எடுத்து கொதிக்கும் குழம்பில் புளிச்சாறு மற்றும் தண்ணீரை சேர்க்கவும்.
STEP 6: அதன் பின்னர், சர்க்கரையை சேர்த்து அத்துடன் ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு நன்கு கிளறவும். சர்க்கரை சேர்ப்பது குழம்பின் சுவையை சமநிலைப்படுத்த உதவும். குழம்பு சில நிமிடங்களுக்கு மிதமான தீயில் விடவும். பின்னர், வேகவைத்த முட்டைகளை சேர்த்து குழம்புடன் நன்றாக கலக்கவும்.
STEP 7: முட்டைகளை சேர்த்த பிறகு நீண்ட நேரம் சமைக்க வேண்டாம். இறுதியாக தாராளமாக நறுக்கி கொத்தமல்லி இலை, கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் முட்டை புளிக்குழம்பு ரெடி.

