அசுரன் திரைப்படத்தில் சிதம்பரம் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் சின்னத்திரை பிரபலம் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகன். தற்போது, இவர் யூத் என்ற திரைப்படத்தை இயக்கிய இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

கென் கருணாஸ்க்கு ஜோடியாக தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் மற்றும் அபிசன் தேவரசா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனராக களமிறங்கிய கென் கருணாஸ் தனது முதல் படத்திலேயே மக்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களத்தை அமைப்பு கலக்கியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: டும்.. டும்.. டும்.. எப்போது?.. திருமண ஆசை குறித்து சாய் பல்லவி Open Talk..!
இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பாளராகும். இவர் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார். பள்ளி பருவ கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை உருவாக்கியுள்ளது. பத்தாம் வகுப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகும் பிரவீன்(கென் கருணாஸ்) 11 வது வகுப்பிற்கு அவனுக்கு சீட் கொடுக்க மாட்டேன் என அவரது ஹெட் மாஸ்டர் கூறிவிடுகிறார்.

அவரிடம் கெஞ்சி எப்படியோ கென்னின் அம்மா பதினொன்னாவது வகுப்பிற்கு படிப்பதற்கு சீட் வாங்கி விடுகிறார். அதன் பிறகு அவர் நன்றாக படித்தாரா? அல்லது பெண்கள் பின்னால் சுற்றி தனது எதிர்காலத்தை கெடுத்துக் கொண்டாரா? என்பதுதான் இந்த படத்தின் மையக்கதை.

இதையும் படியுங்கள்: உசிலம்பட்டி பவுனுத்தாயி வராங்க… ‘தாய் கிழவி’ OTT ரிலீஸ் தேதி குறித்த மாஸ் அப்டேட்..!
இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக, கென் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ரூபாய் 2 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் இப்படி ஒரு தகவல் இணையதளத்தில் உலாவருகிறது.

முன்னதாக யூத் திரைப்படத்தின் வசூல் முதல் நாளில் இருந்து தற்போது வரை அதிகரித்துக் கொண்டே போகிறது. எங்கேயும் குறையவில்லை. இந்த நிலையில், 7 நாட்களை கடந்திருக்கும் யூத் திரைப்படம் உலக அளவில் செய்துள்ள வசூல் பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஆறு நாட்களில் உலகளவில் திரைப்படம் 36 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இனிவரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ஏப்ரல் 10ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் யூத் படம் வருகிறதாம்.

