தென்னிந்திய அளவில் சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழில் வெளிவந்த கில்லி சிங்கம் போக்கிரி போன்ற படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை பொதுவாக கவர்ந்தார். பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவுக்கு தான் மவுசு அதிகம். ஆனால், இவருடைய கதாபாத்திரம் ஹீரோவைக்கும் மிஞ்சியதாக இருந்தது.
அதைப்போல் அபியும் நானும் பயணம் இருவர் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பிலும் பட்டையை கிளப்பினார் என்று சொல்லலாம். அடுத்ததாக, இணைந்து ஜனநாயகன் திரைப்படத்திலும் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார்.

ஃபேஷன் குயின்.. கவர்ச்சியில் எல்லை தாண்டிய சோபிதா.. இணையத்தை அதிர வைக்கும் கிளிக்ஸ்..!
இப்படம் சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரகாஷ்ராஜ் நெட்வொர்த் அதாவது, சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில், நடிகர் பிரகாஷ்ராஜின் பிறந்த நாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

விஜய் குறித்து பேசியது தப்பா?.. த்ரிஷா விவகாரத்தில் சமுத்திரக்கனி கொடுத்த போல்டான பதில்..!
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 50 கோடி என்று கூறப்படுகிறது மேலும், இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க 2.5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், பிரகாஷ் ராஜ் ஹைதராபாத் அருகே ஷாத்நகர் (Shadnagar) பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்டமான பண்ணை வீட்டை வைத்துள்ளார். இதற்கு ‘Life at Prakasham’ என்று பெயரிட்டுள்ளார்.

