Close Menu
    What's Hot

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»நள்ளிரவில் நில ஆக்கிரமிப்பு.. குச்சிகளை நட்டு இடத்தை பிடித்த பொதுமக்கள் – பின்னணி என்ன?..
    கோவை

    நள்ளிரவில் நில ஆக்கிரமிப்பு.. குச்சிகளை நட்டு இடத்தை பிடித்த பொதுமக்கள் – பின்னணி என்ன?..

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Coimbatore Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads


    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர், அத்தப்ப கவுண்டன் புதூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான நிலத்தைக் கைப்பற்றி, அதில் குடியிருக்க இடம் ஒதுக்கக் கோரி நூற்றுக் கணக்கான பொதுமக்கள் நள்ளிரவில் திரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை, இருகூர் அத்தப்ப கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசு புறம்போக்கு நிலத்தில், திடீரென அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திரண்டனர். தங்களுக்குக் குடியிருக்கச் சொந்தமாக இடம் இல்லை என்றும், இந்த அரசு நிலத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    38 ஆண்டுகளுக்குப் பிறகு இடமாற்றம்.. வெற்றிகரமாக முடிந்த ஆபரேஷன் எலிபெண்ட்..!

    கூடியிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான இடத்தைத் தீர்மானித்து, கற்கள் மற்றும் குச்சிகளை நட்டு “போட்டி போட்டு” இடத்தைப் பிடித்தனர். இதனால் அந்தப் பகுதியில் திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்து, பெரும் பரபரப்பான சூழல் உருவானது.


    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சூலூர் வட்டாட்சியர் (Tahsildar), கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் சூலூர் காவல் துறையினர் விரைந்து வந்தனர். அரசு நிலத்தை இப்படித் தன்னிச்சையாக ஆக்கிரமிப்பது சட்டப்படி குற்றம் என்றும், நிலம் தொடர்பான கோரிக்கைகளை முறையான மனுக்கள் மூலம் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் பொதுமக்களிடம் விளக்கினர்.

    சாலையில் கிடந்த பணம்.. 9 வயது சிறுமியின் நேர்மையால் நெகிழ்ந்த காவல்துறை..!

    நள்ளிரவில் அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். “அரசு நிலத்தில் அத்துமீறி நுழைந்து இடம் பிடிப்பது செல்லாது, உடனடியாகக் கலைந்து செல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தகுதி உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

    இருப்பினும், சட்டத்தைக் கையில் எடுத்து நிலத்தைப் பிடிக்கும் இத்தகைய சம்பவங்கள் கோவையில் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது அதிகாரிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    Coimbatore Govt Land Encroachment Free House Site Patta Demand Government Puramboke Land Coimbatore Irugur Public Land Occupation Issue Sulur Tahsildar Peace Talks அரசு புறம்போக்கு நிலம் மீட்பு இருகூர் நில ஆக்கிரமிப்பு பரபரப்பு கோவை அரசு நில ஆக்கிரமிப்பு சூலூர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை வீட்டுமனை பட்டா கோரிக்கை கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுப்பைத் தாண்டி மோதிய கார்.. கேரள புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..!

    March 30, 2026

    48 முறை தோல்வி அடைந்தும் ஓயாத தேர்தல் வேட்கை.. சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்த வேட்பாளர்..!

    March 30, 2026

    அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள்.. தவெக-வில் இணைந்ததற்கான காரணம் குறித்து சூலூர் வேட்பாளர்..!

    March 30, 2026

    இனி வாகனங்களில் இதுக்கெல்லாம் தடா.. தாதா பெயர் எழுதிய பேருந்தால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சிக்கல்..!

    March 30, 2026

    வீட்டு வாசலில் நேர்ந்த கொடூரம்.. 16 வயது மாணவி பலியான விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!

    March 30, 2026

    கதவு இல்லாத பேருந்துகளால் விபரீதம்?.. பேருந்து படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்ட பெண்..! (வீடியோ)

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும்…

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026

    வில்லிவாக்கம் மக்களுக்கு… வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஆதவ் அர்ஜூனா உருக்கம்!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.