டெய்லி ஒரே மாதிரியான டிபன் சாப்பிட்டு போர் அடிச்சு போனவங்களா நீங்க, கொஞ்சம் வித்தியாசமான சுவைல ஒரு பிரேக்பாஸ்ட் ரெசிபியை சாப்பிட நினைக்கிறீங்கனா இந்த ராகி பன் தோசையும் தொட்டுக்க வேர்க்கடலை சட்னியும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த காம்போ சம்மர் சீசனுக்கு சூட் ஆகும். இதனால் வர ராகிய கூலாவோ இல்ல களியாவோ, ரொட்டியாவோ சாப்பிட்டு இருப்போம். தோசையா சாப்பிட நினைச்சீங்கன்னா இதை ஒரு டைம் ட்ரை பண்ணி பாருங்க, ருசி வேற லெவல்ல இருக்கும்.
தேவையான பொருட்கள்
- ஒரு கப் ராகி மாவு
- ஒரு கப் ரவை
- அரை கப் புளிச்ச தயிர்
- தண்ணீர்
- சுவைக்கு ஏற்ப உப்பு
சட்னிக்கு,
- ஒரு டீஸ்பூன் எண்ணெய்
- நாலு வரமிளகாய்
- 3 பல் பூண்டு
- சிறிய துண்டு புளி
- 2 சில் பொடியாக நறுக்கிய தேங்காய்
- முக்கால் கப் வறுத்த வேர்க்கடலை
- உப்பு
- தண்ணீர்
தாளிப்பதற்கு,
- ஒரு டீஸ்பூன் எண்ணெய்
- கடுகு ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் அரை டீஸ்பூன்
- அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- ஒரு கொத்து கருவேப்பிலை
- வரமிளகாய்
தோசை தாளிப்பதற்கு,
- ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- முக்கால் டீஸ்பூன் கடுகு
- ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- ஒரு பச்சை மிளகாய்
- சிறிய துண்டு இஞ்சி
- பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
- துருவிய கேரட் ஒண்ணு
- கைப்பிடி அளவு கொத்துமல்லி
செய்முறை
Step 1: முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் ராகி மாவு, ரவை, புளித்த தயிர் மற்றும் ஒரு கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகள் இன்றி நன்றாக கரைத்து ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதற்கு பின்னர் சட்னி செய்து கொள்ளலாம்.
Step 2: அதற்கு ஒரு வானொலி ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வரமிளகாய் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே எண்ணெயில் பூண்டு மற்றும் புளிகள் சேர்த்து நன்கு வதக்கி அதையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Step 3: பிறகு மிக்ஸ் மிக்சர் ஜாரில் அல்லது ஆட்டுக்கல்லில் தேங்காய் வறுத்த வேர்க்கடலை வர மிளகாய் பூண்டு புளி சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து சிறிது நீரூற்றி சற்று பொறகரவென அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு ஜாரில் சிறிது நீரை ஊற்றி அரைத்து சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
1 கப் வெங்காயம் இருந்தா போதும்.. அவசர சமையலுக்கு ஏற்ற ருசியான சட்னி..!
Step 4: அதன் பின்னர் ஒரு சிறிய வானுடைய அடுப்பில் வைத்து சட்னியை தாளிக்க எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்தால் வேர்க்கடலை சட்னி தயார். அடுத்து சட்னி தாளிக்க அதே கடாயில் அடுப்பில் வைத்து அதில் பன்தோசை தாளிப்பதற்கு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
Step 5: பின்னர் அதில், பெருங்காயத்தூள் பொடியாக நறுக்கி பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
கிராமத்துச் சுவையில் தயிர் கத்திரிக்காய் குழம்பு.. அசத்தலான லஞ்ச் ரெசிபி..!
Step 6: அதன் பின்னர் துருவிய கேரட் மற்றும் கொத்துமல்லி தூவி ஒரு நிமிடம் வதக்கி இறக்கி நன்றாக குளிர வைக்க வேண்டும். பின்னர், ஊறவைத்த மாவை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கலந்து விட வேண்டும்.
Step 7: மாவு மிருதுவாகவும் கெட்டியாகவும் இருந்தால் கால் டம்ளர் நீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இறுதியாக ஒரு சிறிய தவா அல்லது ஆப்பக்கல்லை அடுப்பில் வைத்து கல் நன்றாக சூடு ஏறியதும் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி மேலே எண்ணெய் ஊற்றி மூடி வைத்து மன்று நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின் மூடியை திறந்து பன் தோசை திருப்பி போட்டு ஒரு நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ராகி பந்து ஓசை ரெடி.

