Ranveer Singh – Aditya Dhar கூட்டணியில் உருவான துரந்தர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானபோது எதிர்பாராத அளவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அதனால் அதன் தொடர்ச்சியாக உருவான துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் ஆரம்பத்திலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹைப் உருவாக்கியது.
அந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், முதல் நாளிலிருந்தே பேசுபொருளாக மாறியது.
கதை, காட்சிகள், அரசியல் பின்னணி உள்ளிட்ட பல அம்சங்களில் கலவையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்தாலும், வசூல் வேகத்தில் எந்த வித தளர்வும் இல்லாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

குறிப்பாக, தென்னிந்தியாவில் வசூல் சாதனைகளை பதித்த Pushpa 2 படத்தின் பல முக்கிய ரெக்கார்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக முறியடித்து, துரந்தர் 2 தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இது பாலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமா முழுவதும் இந்தப் படத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், வெளியான 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 930 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள் வரவிருப்பதால், இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என வணிக வட்டாரங்கள் கணிக்கின்றன.

விமர்சனங்களை மீறி, ரசிகர்களின் ஆதரவு மற்றும் பெரிய அளவிலான திரையிடல்கள் மூலம் துரந்தர் 2 தற்போது பாக்ஸ் ஆபிஸில் ‘அணுக முடியாத கோட்டை’ போல உயர்ந்து நிற்கிறது. வரும் நாட்களில் 1000 கோடி கிளப்பில் இணையும் படங்களின் பட்டியலில் இது இடம்பெறுவது உறுதியாக பார்க்கப்படுகிறது.

