கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரம் பகுதியில் பயனியர் மில்ஸ் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது.இப்பள்ளியில் நந்தகுமார் என்ற மாணவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தை முக்கூரன் இவர் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சியில் வாட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார்.
அவரது தாயார் அங்குள்ள சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தாயாரின் உடல்நிலை காரணமாக பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஒரு வருடமாக தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது சொந்த அருப்புக்கோட்டை.
இந்த நிலையைல் கடந்த வியாழக்கிழமை விடுதியில் சமையல் எரிவாயு காலியாகி விட்டதால் காலை உணவாக பிரட் வழங்கியுள்ளனர்.
ரூ. 50,000 கொடுத்தால்தான் கடை நடக்கும்.. அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டிய திருநங்கைகள்..!
விறகு அடுப்பில் மதிய உணவு சமைக்க அங்கிருந்த காய்ந்த மரத்தில் ஏறி மாணவன் விறகு உடைக்க சொல்லி இருக்கின்றனர். ராஜ்குமார் என்பவர் நந்தகுமார் உள்ளிட்ட சில மாணவர்களை வற்புறுத்தி காய்ந்த கிளைகளை உடைக்க மரத்தில் எறச்சொல்லியுள்ளார்.
காய்ந்த மரத்தில் மாணவர்கள் ஏறிய பொழுது, அதில் ஒரு கிளை உடைந்து மாணவர் நந்தகுமார் தவறி கீழே விழுந்து முதுகில் பலத்த காயமடைந்துள்ளார். 26 அடி உயரமுள்ள மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் நந்தகுமாருக்கு இடுப்பு எலும்பு உடைந்துள்ளது. விபத்து நடந்து 1 மணி நேரம் அறைக்குள் வைத்து ஐஸ்கட்டிகளை வைத்து சரிசெய்ய பார்த்துள்ளனர்.
பேரூர் தேர் திருவிழாவில் திடீர் சிக்கல்?.. 120 ஆண்டு பழமையான தேரை ஆய்வு செய்த அதிகாரிகள்..!
அதையடுத்து மாணவருக்கு வலி அதிகமாக அங்கிருந்த காவலாளியிடம் வண்டியை வாங்கி மாணவனை அழைத்துக்கொண்டு ஜோதிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் மாணவன் விழுந்தது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்துந்துள்ளனர்.
அங்கிருந்தவர்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் அங்கு வந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனல் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். போலிசார் இது தொடர்பாக போலிச்சர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

