Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»இறந்தவர்களை அடக்கம் செய்ய இடமில்லை.. தேர்தலை புறக்கணிக்கும் கிறிஸ்தவ அமைப்புகள்..!
    கோவை

    இறந்தவர்களை அடக்கம் செய்ய இடமில்லை.. தேர்தலை புறக்கணிக்கும் கிறிஸ்தவ அமைப்புகள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Election Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூலூர் பகுதியில் நிலவி வரும் நீண்டகால மயானப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி, சுமார் 4,000 கிறிஸ்தவக் குடும்பங்கள் வரும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும், வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றிப் போராடப் போவதாகவும் அறிவித்துள்ளன.

    கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தேவாலயத்தில், சூலூர் கிறிஸ்தவர் சமூக நல அறக்கட்டளை மற்றும் பெந்தகோஸ்தே மாமன்றம் உள்ளிட்ட பல்வேறு திருச்சபைகளின் கூட்டமைப்பினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சூலூர் பகுதியில் கடந்த 1974-ஆம் ஆண்டு கக்கன் நகரில் ஒதுக்கப்பட்ட மயான நிலத்தைப் பயன்படுத்த முடியாத நிலை நீடிப்பதாலும், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யத் திருப்பூர், பல்லடம், மதுக்கரை எனப் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் அவலம் தொடர்வதாலும், கிறிஸ்தவர்களுக்காக கொடுக்கப்பட்ட மயானத்தில் புதைக்க இடம் கிடைக்காமலும், அதை முறைப்படுத்த முடியாமலும் இங்குள்ள கிறிஸ்தவர்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    பலமுறை இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்படும் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்காமல் வருகிறது முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தும் நேரில் சந்தித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இந்நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக சூழலில் இந்தக் கூட்டத்தில் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெந்தகோஸ் மாமன்ற தலைவர் செல்வராஜ், “கடந்த 14 வருடங்களாக இந்த மயானப் பிரச்சினை தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அரசுக்குத் தகுந்த அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்தத் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடுத்துள்ளோம்.

    இதன் ஒரு பகுதியாக, சூலூர் பகுதியில் உள்ள 4,000 கிறிஸ்தவக் குடும்பங்களின் வீடுகளிலும் கருப்புக் கொடிகள் மற்றும் போராட்டத்தை விளக்கும் பேனர்கள் வைக்கப்பட உள்ளன” எனத் தெரிவித்தார்.கிறிஸ்தவர் சமூக நல அறக்கட்டளையின் பொதுச் செயலாளர், தொடர்ந்து பேசிய டான் பாஸ்கோ, இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் பலமுறை மனு அளித்துள்ளோம்.

    ஆனால் இதுவரை கிறிஸ்துவ அமைப்பினரை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தொடர்ந்து போராடியும் தீர்வு எட்டப்படாத நிலையில், தேர்தலைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விரைவில் மனு அளிக்க உள்ளோம்” என்றார்.

    Burial ground problem Tamil Nadu Coimbatore Christians issue Election boycott Sulur Sulur protest news Tamil Nadu protest news கிறிஸ்தவர்கள் மயான பிரச்சனை சூலூர் போராட்டம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கறார் காட்டிய தேர்தல் அதிகாரி.. மாடிக்கு ஊர்ந்து சென்று மனுத்தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி..!

    April 4, 2026

    ஓட்டுக்கு பணம் வாங்கினால் இதுதான் கதி.. மொட்டை அடித்து மிளகாய் மாலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்..!

    April 4, 2026

    அலட்சியமா? விபத்தா? 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!

    April 4, 2026

    போக்குவரத்து நெரிசலில் சாவகாசமாக சாலையை கடந்த ‘பாகுபலி’ யானை..!

    April 4, 2026

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதலமைச்சர் வீட்டு பக்கத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்… அண்ணாமலை கிளப்பிய பரபரப்பு!

    March 12, 2026

    வாய்ப்பு தந்த இயக்குநரின் மகளின் படிப்பு செலவை ஏற்ற யோகி பாபு.. அந்த மனசு தான்..!

    March 4, 2026

    இளம் பெண்ணை எரித்த வழக்கு.. போலீசிடம் இருந்து தப்ப முயன்று மாவு கட்டு வாங்கிய இளைஞர்..!

    February 21, 2026

    மறுமணம் செய்யப் போவதாக வெளியான தகவல்.. முதல்முறையாக மனம் திறந்த மீனா.!

    February 20, 2026

    சந்திரயான், ரோவர் சிலையில் ஏன் தமிழ் எழுத்துக்கள் இல்லை.. மயில்சாமி அண்ணாதுரை பளிச் பதில்..!

    February 19, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.