பொதுவாக நம் எல்லோருக்கும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், நம் கைகளிலே இருக்கக்கூடிய பல சத்தான உணவுகளை நாம் சாப்பிடுவது இல்லை. அதில், ஒன்றுதான் முருங்கைப்பூ. இந்த முருங்கை பூவில் பல சத்துக்கள் இருப்பதோடு, மட்டுமல்லாமல் பல மருத்துவ ரகசியங்கள் நமக்கு தெரிவதில்லை. அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம்.

Table of Contents
முக்கிய மருத்துவப் பயன்கள்

நரம்புத் தளர்ச்சி நீங்க
- அதிக வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சியைச் சரிசெய்ய முருங்கைப்பூ கசாயம் மருந்தாகப் பயன்படுகிறது.
இதையும் படியுங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா?.. பலாப்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள்..!https://utvprime.in/2026/03/23/jackfruit-health-benefits-health-benefits-in-tamil/
தாம்பத்திய உறவு மேம்பட
- பாலில் முருங்கைப்பூவைச் சேர்த்துக் காய்ச்சி 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாம்பத்திய உறவில் நாட்டமின்மை மற்றும் ஆண்மைச் சார்ந்த குறைபாடுகள் நீங்கும்.
கண் பார்வைத் திறன்
- முருங்கைப்பூவைச் சமைத்து உண்பதால் கண்கள் குளிர்ச்சியடைந்து, பார்வைத் திறன் மேம்படும்.
ஞாபக சக்தி
- வளரும் குழந்தைகளுக்கு முருங்கைப்பூவை உணவில் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் மூளை செல்கள் புத்துயிர் பெற்று ஞாபக சக்தி அதிகரிக்கும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் முருங்கையின் பலன் பற்றி கூறப்பட்டு இருக்கிறது. சித்தர்கள் முருங்கையை ‘பிரம்மவிருட்சம்’ அற்புத ஆற்றலை அளிக்கக் கூடியதாக அழைக்கின்றனர். வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் இருந்தாலும், நாம் முருங்கை பூவை சாப்பிட தவற விடுகின்றோம்.
இதையும் படியுங்கள்: 40 வயதை கடந்தவரா நீங்கள்?.. இடுப்பு, மூட்டு வலிக்கு சொல்லுங்க குட்பை..! https://utvprime.in/2026/03/21/health-benefits-of-mudakathan-keerai-for-joints/

கவனிக்க வேண்டியவை
முருங்கைப்பூவைச் சமைக்கும் போது அதிக நேரம் வேகவைக்கக் கூடாது, ஏனெனில் அதிலுள்ள நுண் சத்துக்கள் அழிந்துவிட வாய்ப்புள்ளது. முடிந்தவரை ஆவியில் வேகவைத்தோ அல்லது லேசாக வதக்கியோ பயன்படுத்துவது சிறந்தது.
முருங்கை பூவில் நிறைந்து இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் நமக்கு தெரிவதில்லை. ஆதலால், முருங்கை பூவை விட முருங்கை காயை நாம் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்துகிறோம். இன்றைய காலகட்டங்களில் பலருக்கு வேலை பளு இரவு நேர வேலை போன்ற பணி சுவை அதிகமாக இருக்கிறது.

இதனால் மன அழுத்தம் அவர்களுக்கு வருகிறது. மன அழுத்தம் ஏற்பட்டால், இவர்களுக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி வர வாய்ப்புகள் உள்ளது. இந்த மாதிரி நேரங்களில் அவர்கள் முருங்கை பூவை கசாயம் வைத்து வாரம் ஒரு முறை குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி வராமல் இருப்பதோடு நரம்பு தளர்ச்சியும் ஏற்பட்டு இருந்தால் விரைவில் குணமடையும்.
இதையும் படியுங்கள்: மருந்து பாட்டிலைத் திறந்துவிட்டீர்களா?.. குழந்தைகளுக்கு கொடுக்கும் சிரப்பில் இந்த தவறை செய்யாதீர்கள்..! (வீடியோ) https://utvprime.in/2026/03/19/how-long-to-use-syrup-after-opening-bottle/

மேலும், திருமணம் ஆன தம்பதியினருக்கு தாம்பத்திய உறவு நாட்டமில்லை போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், அவர்கள் முருங்கை பூவை ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ஒரு நல்ல மாற்றம் உடலில் ஏற்படுவதை கண்கூடாக காணலாம். முருங்கை பூவை காயவைத்து பொடியாக்கி தேனுடன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் ஆண்மை கோளாறுகள் விலகும் என்று சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் சொல்லப்படுகிறது.
எளிமையான பயன்பாட்டு முறைகள்
முருங்கைப்பூ பால்
- காய்ச்சிய பாலில் ஒரு கைப்பிடி பூக்களைப் போட்டு, பனங்கற்கண்டு சேர்த்து அருந்த வேண்டும்.
- உடல் பலவீனம் நீங்கும், தாது விருத்தி ஏற்படும்.

முருங்கைப்பூ பொடி
- பூக்களை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிடலாம்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முருங்கைப்பூ துவையல்
- பூக்களை லேசாக வதக்கி இஞ்சி, பூண்டு, மிளகாய் சேர்த்துத் துவையலாகச் செய்யலாம்.
- பித்தம் தணியும், பசியைத் தூண்டும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

