கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியை அடுத்த தட்டாம் புதூர் பகுதியில் மதுபோதையில் கார் ஓட்டி வந்த நபரால் ஏற்பட்ட பயங்கர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தட்டாம் புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் பள்ளியில் படிக்கும் சிறுமி மற்றும் அவரது தந்தை மீது, அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக பின்புறமாக மோதியது.
விரலில் மை.. மனதில் உறுதி.. எல்.ஆர்.ஜி கல்லூரி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு..!
இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.காரை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
திமுக vs அதிமுக vs விஜய்: மும்முனைப் போட்டியில் தமிழகம் – யாருக்கு எத்தனை இடங்கள்?..
இது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமாக வந்த கார் பைக்கில் மோதும் அந்த பதைபதைக்கும் காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

