நடிகர் விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து வேண்டி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததோடு, கணவருக்கு வேறொரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து, அந்த நடிகை யார் என பலரும் தேடலில் ஈடுபட்டனர்.
அந்த சூழலில், தயாரிப்பாளர் வீட்டு திருமணத்திற்கு த்ரிஷாவுடன் மேட்ச் ஆடை அணிந்து கொண்டு ஜோடியாக விஜய் வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொண்டர்களும், ரசிகர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்தனர். இருந்தாலும், இந்த முறை கொஞ்சம் தெளிவாகவே பேசினார்கள்.

இதற்கெல்லாம், எங்களால் முட்டு கொடுக்க முடியாது என்று ஓப்பனாகவே தவெக தொண்டர்கள் அடித்தார்கள். அவர்கள் மட்டுமின்றி சமுத்திரகனி, பார்த்திபனும் திரைத்துறையிலிருந்து குரல்கள் இதற்கு எதிராக வலுத்தன. மற்றவர்களும் இது அவர்களது பர்சனல் வாழ்க்கை என சொல்லி அமைதியாகிக் கொண்டார்கள்.
இதையும் படியுங்கள்: அமலாக்கத்துறை பிடியில் ஷங்கர்?.. சொத்துக்கள் முடக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை ஒத்திவைப்பு..!
இந்நிலையில், இது ஒரு புறம் இருக்க தற்போது, பிக் பாஸ் பிரபலமும் லியோ படத்தில் நடித்தவருமான ஜனனி பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், இலங்கை நடிகை ஜனனி சில வருடங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் லியோ சூட்டிங்கில் விஜய் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது இலங்கை என சொன்னேன். அதற்கு அவர் எனது மனைவி கூட யாழ்ப்பாணம் தான் தெரியுமா? என கேட்டார். தெரியும் சார் என சொன்னேன். அப்போது, அவர் பேசுவதற்கு நீங்க கதைத்தல் என்று தானே சொல்லுவீங்க எனது மனைவியும் அவரது சகோதரியும் அப்படித்தான் பேசிக்குவாங்க, நீங்கள் பேசுவது போல் தான் பேசுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்: விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் பிரபல நடிகர்.. மனம் திறந்த பிரபல இயக்குனர்..! https://utvprime.in/2026/03/23/karuppu-script-first-narrated-to-vijay/

இந்த விஷயத்தை தற்போது, சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மீண்டும் வைரலாக்கி வருகின்றனர். விஜய் – சங்கீதா பிரிவு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? இந்த நெகிழ்ச்சியான வீடியோ என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

