கோலிவுட் சினிமாவில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோ ஆனவர் நடிகர் சூரி. மதுரையைச் சேர்ந்த சூரி, ஆரம்பத்தில் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 2009-ல் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் வரும் ‘பரோட்டா’ காமெடி இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. அதன்பிறகு ‘பரோட்டா சூரி’ என்று அழைக்கப்படலானார்.

தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ போன்ற படங்கள் மிகப்பிரபலமடைந்தது.
ஆரம்பமே இப்படியா?.. அந்த நிபந்தனையால் பெற்றோரிடம் மல்லுக்கட்டிய மிருணாள் தாகூர்..!

இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ (பாகம் 1) படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகி, தனது யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார். தற்போது, அவர் ஹீரோவாக நடிக்கும் ஏழாவது படம் குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

130 கோடி பட்ஜெட்.. 90% ரெக்கவரி.. ரிலீஸுக்கு முன் ‘கருப்பு’ படத்தின் ப்ரீ-பிசினஸ் ரிப்போர்ட்..!
அயலான் படம் பெரிய அளவில் வரவேற்ப்பை பெறாத நிலையில், ரவிக்குமாரின் முந்தைய படமான இன்று நேற்று நாளை படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒன்று. சூரி மற்றும் ரவிக்குமார் கூட்டணியில் இந்த படத்தினை மைதிலி நிறுவனம் தயாரிக்கிறது. Blood Followed The Flood என போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனால், வெள்ளத்தை மையமாக வைத்த கதையாக இது இருக்கும் என யூகிக்கப்படுகிறது.

