உங்க வீட்ல இன்னைக்கு நைட்டு இட்லி, தோசை செய்ய பிளான் பண்ணி இருக்கீங்களா? எப்பவுமே ஒரே மாதிரி சட்னி செஞ்சு போர் அடிச்சு போனவங்களா? இந்த ஒரு தடவை கொஞ்சம் வித்தியாசமான சட்னியை ட்ரை பண்ணி பார்க்கலாமா? இந்த வறுத்த வெங்காய சட்னியை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
- வெங்காயம் நறுக்கியது ஒரு கப்
- உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் அரை டீஸ்பூன்
- புளி சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு தேவையான அளவு
- கடுகு அரை டீஸ்பூன்
- சீரகம் அரை டீஸ்பூன்
- பெருங்காயம் ஒரு சிட்டிகை
- வர மிளகாய் ஐந்து
செய்முறை
Step 1: ஒரு வட சட்டியில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில், கடுகு சீரகம் சேர்த்து அவை வெடிக்க தொடங்கியதும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். அனைத்தும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
Step 2: இறுதியில் பெருங்காயத்தை சேர்க்கவும். பின் இவற்றை ஒரு தட்டிற்கு மாற்றி ஆர விடவும். அதே கடாயில், எண்ணெயை சூடாக்கவும். அதில், நறுக்கிய வெங்காயம், புளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். மிதமான தீயில் வெங்காயம் கண்ணாடி போன்ற பதம் வரும்வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
Step 3: பின்னர் அதை ஆற வைக்கவும். ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த வர மிளகாய் மற்றும் பருப்பு கலவையை சேர்த்து மென்மையாகும் வரை அழைக்கவும். பின் வருத்த வெங்காயத்தை சேர்த்து அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் வரை அரைக்கவும்.
Step 4: அரைத்த சட்னியும் ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். இந்த சட்னியை தாலிக்காமலேயே சாப்பிடலாம். நீங்கள் விருப்பப்பட்டால் கடுகு, கருவேப்பிலை சேர்த்து கூட சாப்பிடலாம். அவ்வளவுதான் சுவையான வதக்கிய வெங்காய சட்னி ரெடி.

