Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»கேவலமா பேசறாங்க.. கண்ணீர் விட்டு அழுத நடிகை ஸ்ரீலீலா..!
    சினிமா

    கேவலமா பேசறாங்க.. கண்ணீர் விட்டு அழுத நடிகை ஸ்ரீலீலா..!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    They are talking badly.. Actress Srileela burst into tears..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் வேகமாக உயர்ந்து வரும் சென்சேஷனல் நடிகைகளில் முன்னிலையில் இருப்பவர் ஸ்ரீலீலா.

    குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், இந்த ஆண்டு தமிழில் வெளியான பராசக்தி திரைப்படத்தின் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால், பல எதிர்பார்ப்புகளுடன் வெளியான அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல், சராசரி வரவேற்பில் முடிந்தது.

    அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியான உஸ்தாத் பகத் சிங் திரைப்படமும் விமர்சகர்களிடையே நல்ல மதிப்பீட்டை பெறாமல், எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமாக சந்தித்து வருகிறது. இதனால் ஸ்ரீலீலாவின் சமீபத்திய படத் தேர்வுகள் குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில், நடிப்பைத் தாண்டி தனது ஆற்றல்மிக்க நடனத்தால் ரசிகர்களை கட்டிப்போடும் ஸ்ரீலீலா, குறிப்பாக புஷ்பா 2 திரைப்படத்தில் ஆடிய உற்சாகமான நடனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, இளம் ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்தார்.

    ஆனால், இந்த புகழின் மறுபக்கமாக, கடுமையான ட்ரோல்கள் மற்றும் விமர்சனங்களையும் அவர் சந்தித்து வருகிறார். சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து திறந்த மனதுடன் பேசிய ஸ்ரீலீலா, ஆரம்ப காலத்தில் சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை கருத்துகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும், பலமுறை தனியாக கண்ணீர் விட்டு அழுததாகவும் உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார்.

    மேலும், காலப்போக்கில் விமர்சனங்களை சமாளிக்கும் மன வலிமை தன்னிடம் வளர்ந்துவிட்டதாக கூறிய அவர், “எதை ஏற்க வேண்டும், எதை புறக்கணிக்க வேண்டும் என்பதை இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீலீலா, கடந்த அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொண்டு, தனது வளர்ச்சிக்கும் நடிப்புத் திறன் மேம்பாட்டிற்கும் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

    Sreeleela விமர்சனம் ஸ்ரீலீலா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.