நடிகரும் தவெக தலைவருமான விஜயுடன் திரிஷா திருமண நிகழ்ச்சிக்கு சென்றது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாற அவருக்கு ஆதரவாக பேசி வந்த பலரும் விஜயின் இந்த செயலை கடுமையாக சாடினர். இப்படி இருக்கும் போது, மகளிர் தின கொண்டாட்டத்தில் தனது விவகாரத்து விவகாரம் குறித்து பேசுகையில், அதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை என்று பேசியதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதனிடையில், தற்போது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், நடிகர் விஜய் மும்பையில் இயக்குனர் அட்லி பிரியா தம்பதியரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் இணையவாசிகள் சிலர் கடந்த வாரத்தில் திரிஷா மும்பைக்கு சென்றார். தற்போது, நடிகர் விஜய் மும்பையில் அட்லி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டுள்ளார். இதை மையமாக வைத்து விஜய் மற்றும் திரிஷா இணைந்து இந்த விசேஷத்தில் கலந்து கொண்டிருக்கலாம் என்று பேச்சுக்கள் பரவலாக அடிபட்டு வருகிறது.

இருவரும் இணைந்து சென்றால், அது மேலும் சர்ச்சையாக மாறும் என்றும், தேர்தலில் அது எதிரொளிக்கும் என்பதால், திரிஷாவுடன் விஜய் இணைந்து செல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறார் என்றும், அரசியல் தளத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


