தரம் தாழ்ந்த செய்திகளைத் தினந்தோறும் அள்ளி வீசும் ஒரு ‘உதவா-கரன்’ ஆக தினகரன் பத்திரிகை மாறிவிட்டது என தவெக ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகை மற்றும் சமூக ஆர்வலர் நிவேதா பெத்துராஜ் விஷயத்தில் தினகரன் செய்திருக்கும் காரியத்தை பார்த்தால், பத்திரிகை தர்மம் காற்றில் கரைந்துவிடும் போலிருக்கிறது.

ஐடி விங் வெறுப்பையும், தவறான தகவல்களையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் அதிகரித்து கொண்டிருந்தால், அந்த பொறுப்பு, அக்கட்சியின் தலைவரையே சேரும் என்று கூறியிருந்தார். எழுத்தாளர் மீனா கந்தசாமி விஷயத்தில் திமுக ஐடி விங் ஆபாச தாக்குதல் நடத்தியதை ஒட்டியே இது எழுதப்பட்டுள்ளது.
இந்த உண்மையைச் சொல்ல வேண்டிய இடத்தில், கற்பனைத் குதிரையைத் தறிகெட்டு ஓடவிட்டு, செய்திக்கும் நிஜத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறது இந்த ‘வதந்தி-கரன்’.

இவர்களின் வன்மத்தைப் பார்த்தால் ஆத்திரத்தை விட, “இப்படியா இளிச்சவாய்த்தனமாக பொய் சொல்வார்கள்?” என்கிற சிரிப்புதான் பொத்துக்கொண்டு வருகிறது.
அறிவாலயத்தின் அடிமைச் சேவகம் செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு, சொந்தமாகச் சிந்திக்கும் திறன் மழுங்கிப் போய்விட்டது.
அறிவாலயத்தில் இருக்கும் கொத்தடிமைக் கூட்டம் கூட இவர்களின் செய்திகளைப் படித்துவிட்டு, “என்னப்பா இது, நாங்களே நம்புற மாதிரி இல்லையே!” என்று தலையில் அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

அந்தளவுக்குத் தரம் தாழ்ந்த செய்திகளைத் தினந்தோறும் அள்ளி வீசும் ஒரு ‘உதவா-கரன்’ ஆக இது மாறிவிட்டது.
பாவம், தன் கட்சிக்காரர்களே தன்னை வாசிப்பதில்லை என்ற விரக்தி இவர்களை ஆட்டிப்படைக்கிறது. காலையில் பேப்பரைத் திறந்தால் காபி கசக்கும் அளவுக்குப் பொய்களை அச்சிடுவதால், பொதுமக்களும் இவர்களைக் கண்டால் காத தூரம் ஓடுகிறார்கள்.
யாரும் சீந்துவதில்லை என்ற ஏமாற்றத்தில், யார் மீதாவது பொய்யை வாரி இறைத்துத் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ளத் துடிக்கும் ஒரு ‘விரக்தி-கரன்’ கூட்டமாகவே இவர்கள் தெரிகிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், காலையில் கண் விழித்ததும் ஒரு உருப்படியான செய்தியை கூட தராமல், இல்லாததை இருப்பதாகக் காட்டி ஊரை ஏமாற்றுவதே இவர்களுக்குப் பிழைப்பாகிப் போனது. ஒரு துறையை எப்படிச் சிதைக்க வேண்டும் என்பதற்கு இவர்களே ஒரு அகராதி எழுதலாம்.
‘தினகரன்’ என்றால்’பொய்கரன்’ என்று அர்த்தம். இவ்வாறு தவெக .ஐடி விங் குறிப்பிட்டுள்ளது.

