ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு விருந்து இன்று ரமலான் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சம்பாதிக்கும் தொகையின் ஒரு பகுதியை கொடை வழங்க வேண்டும் என மார்க்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு தங்களது நோன்புத் திருநாளில் நண்பர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்குவதை இஸ்லாமியர்கள் தங்கள் கடமையாக செய்து வருகின்றனர் பண்டிகை கொண்டாடும் நாளில் கூட நண்பர்களுக்கு வழங்க பிரியாணி செய்து அவர்களுக்கு கொடுப்பது என அன்றும் வேலையில் மூழ்குகின்றனர்.
திருப்பூர் கல்லூரி சாலை ஐயப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த பாத்திமாபீவி குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக ரம்ஜான் பண்டிகைக்கு நண்பர்கள் உறவினர்களுக்கு பிரியாணி வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பாத்திமா பீவி கூறுகையில் தன் திருமணம் ஆகி வந்தது முதல் இன்று வரையிலும் இதனைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் தனது கணவர் மட்டும் சம்பாதித்து வந்த காலத்தில் 5 கிலோ அரிசியில் மட்டும் பிரியாணி செய்து அதனையும் அனைவருக்கும் கொடுத்து வந்ததாகவும், இன்று தங்களது மகள்கள் மருமகன்கள் இணைந்து 30 கிலோ அரிசியில் பிரியாணி செய்து 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்கி வருவதாகவும் அடுத்த ஆண்டு தனது மகன்கள் மூலம் மேலும், அதிகரித்து 40 கிலோ பிரியாணி செய்து வழங்க வேண்டும் என்பது ஆசை என தெரிவித்தார்.
ஒவ்வொரு இஸ்லாமியர்களும் தாங்கள் சம்பாதித்து எளிதில் இருந்து ஒரு பகுதியை கொடைக்கு ஒதுக்க வேண்டும் அதனை நாங்கள் இன்றளவும் கடைபிடித்து வருகிறோம். இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரியாணி என்பது உணவைக் கடந்து அன்பை பரிமாறும் விஷயமாக உள்ளதால் மதம் கடந்த நட்பை உருவாக்குவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

