ராயபுரத்தை பூர்வீகமாக கொண்ட கானா வினோத் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பிரபலமானார். வினோத்தின் மனைவி பாக்யா, பியூட்டி பார்லர் வைத்துள்ளாராம். மகன், மகள் என வினோத்துக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
முன்னதாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கானா வினோத். ஒன்பதாவது சீசனில் டைட்டிலை வென்றிருக்க வேண்டும், ஆனால், இடையில் 18 லட்சத்தை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இவர் பேசும் போது விஜய் சாரே அழைத்து கட்சிக்கு ஒரு அரசியல் பாட்டு பாட சொன்னால் நான் பாட மாட்டேன். நான் எல்லோருக்கும் பொதுவான ஒரு ஆள். அவர் கட்சிக்காக நான் பாடினால் அது தனிப்பட்ட விஷயமாகிவிடும்.

இதுவே, நான் அவர் படத்தில் பாட சொன்னால் கண்டிப்பாக பாடுவேன். கண்டிப்பாக, கட்சிக்காக மட்டும் நான் என்றைக்குமே பாடல் பாட மாட்டேன் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

