இது குறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நீதி பேசும் யோக்கியர்களின் சாயம் வெளுத்துவிட்டது! அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுவெளியில் கக்கியுள்ள அந்த அருவருக்கத்தக்க வார்த்தை, திமுக-வின் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் ‘சாதிய வன்மத்தையும், திமிர் பிடித்த பண்ணையார் புத்தியையும்’ அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது
‘உங்க அப்பாவோட கோவணத்துக்குள்ள இருந்தீங்கடா’ என்று ஓர் அமைச்சர் பேசுகிறார் என்றால், இவர்களுக்குச் சாமானிய மக்கள் மீது என்ன மரியாதை இருக்கிறது? இதுதான் நீங்கள் மேடைக்கு மேடை முழங்கும் சுயமரியாதை அரசியலா?
பேரறிஞர் அண்ணா செதுக்கிய கொள்கையும், தந்தை பெரியார் வழிகாட்டிய சமூக நீதியும் இன்று இந்த ‘வசூல் ராஜாக்களின்’ கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றன. சாதியத்தை ஒழிப்போம் என்று கூவிக்கொண்டே, கட்சியின் தலைமை முதல் கடைக்கோடித் தொண்டன் வரை சாதியத் திமிரையும், அதிகார ஆணவத்தையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு இந்த ஆட்சி நடக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! தன்னை ‘பெரியாரின் பேரன்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நீங்கள், உங்கள் அமைச்சரின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு இன்னும் ‘கள்ள மௌனம்’ சாதிப்பது ஏன்? உங்கள் அமைதிக்கு என்ன பொருள்? அமைச்சரின் சாதியத் திமிரை நீங்கள் ரசிக்கிறீர்களா? அல்லது அதை அங்கீகரிக்கிறீர்களா?
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பெரியார் படத்தைத் திறந்து வைத்து ‘ஸ்டிக்கர் அரசியல்’ செய்வதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காடாவது, உங்கள் கட்சியினரின் சாதி வெறியை அடக்குவதில் காட்ட வேண்டாமா? பெரியாரின் கொள்கைகளைத் தமிழ்நாட்டிலேயே குழிதோண்டிப் புதைக்கும் உங்கள் கட்சிக்கு, அவர் பெயரை உச்சரிக்கவே தகுதி கிடையாது!

சாதியப் பற்றும், குடும்ப வாரிசு அரசியலும், ஊழல் பண்ணையார் அதிகாரமும் கொண்ட இந்த ‘ஆணவக் கூட்டத்திற்கு’ முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். விளம்பர வெளிச்சத்தில் நீங்கள் நடத்தும் இந்த நாடகம் இனி செல்லாது.
மக்களை இழிவுபடுத்தும் இவர்களது சாதிய சாம்ராஜ்யத்தை, வேரோடு பிடுங்கி எறிய தமிழக மக்கள் உறுதி பூண்டுள்ளனர்! இவ்வறு குறிப்பிடப்பட்டுள்ளது.

