விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பின்னர் நடுவராக உயரும் அளவிற்கு தனது நகைச்சுவை திறமை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர்.
இவர் தமிழ் திரையுலகம் அடையாளம் கண்டு அங்கீகரிப்பதற்கு முன்னரே சின்ன திரையில் சிகரம் தொட்டுவிட்டார் என்று சொல்ல வேண்டும். இவரது மனைவி பிரியங்கா சங்கரும், மகள் இந்திரஜா சங்கர் என இவர்களது மொத்த குடும்பமே ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றவர்கள்.

கடந்த ஆண்டு ரோபோ சங்கர் மறைந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், ரோபோ சங்கர் மறைவிற்குப் பின்னர் மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கும் அவரது குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக அதிகப்படியான பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

முன்னதாக, ரோபோ சங்கருக்கு தமிழ்நாடு மாநில விருது, நகைச்சுவை நடிகர் என்ற விருதுகள் வழங்கப்பட்ட போது தனது பேரன் நட்சத்திரனை தூக்கிக்கொண்டு சென்று பிரியங்கா இந்த விருதை வாங்கினார். மேலும், இந்த விழாவில் இந்திரஜா ஷங்கருக்கு சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

முன்னதாக, பிகில் படத்தின் மூலமாக நடிகையாக சினிமாவில் என்ட்ரீ கொடுத்த இந்திரஜாவுக்கு 2024 ஆம் ஆண்டு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை கடந்த ஆண்டு பிறந்தது. இந்நிலையில், தன்னைப் பற்றியும் தனது குழந்தை பற்றியும் மிகவும் மோசமான வகையில், பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருவதாக வேதனையுடன் இந்திரஜா பேசியுள்ளார்.

அதில், வாடகைத்தாய் டெஸ்ட் டியூப் பேபி என்று பலரும் விமர்சிக்கிறார்கள். திருமணத்திலிருந்து, இதுவரை இப்படியான கருத்துக்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகவும், அவை மனதை மிகவும் காயப்படுத்துகின்றன. உண்மை அறியாமல், எதையும் பேசாதீர்கள். ஒரு தாயாகும் போது அவள் எதிர்கொள்ளும் சூழலை புரிந்து கொள்ளுங்கள் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

