சமையல் சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்றுதான் ஏலக்காய் உணவிற்கு நல்ல மனத்தையும் சுவையையும் தருகிறது. இதில், ஏராளமான மருத்துவ பண்புகள் இருக்கிறது. இதனால், ஆயுர்வேதத்தில் பல ஆரோக்கியம் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க ஏலக்காயை பயன்படுத்துகின்றனர்.

Table of Contents

முக்கியமாக இது செரிமான பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணத்தை கொடுக்கிறது. இப்படிப்பட்ட ஏலக்காயை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. தினமும், காலையில் எழுந்து ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
செரிமான பிரச்சனையை குணப்படுத்தும்

இதில் அடங்கி இருக்கக்கூடிய நறுமணம் மிக்க பொருட்கள் செரிமான நொதிகளின் செயல்பாட்டை தூண்டும். எனவே, வயிறு நிறைந்த உணவை உட்கொண்ட பின்னரே அல்லது எண்ணெயில் பொறித்த உணவுகளை உட்கொண்ட பின்னரோ செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது சிறந்தது.
வாய் துர்நாற்றத்தை தடுக்கும்

வாய் துர்நாற்றத்திற்கு நம் மூதாதையர்கள் பயன்படுத்திய ஒரு இயற்கை வழி தான் ஏலக்காய். இதனை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகள் இதில் இருப்பதாலும், வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை குறைக்க இது உதவுகிறது. எனவே வாய் துர்நாற்ற பிரச்சனையையால் பாதிக்கப்படுபவர்கள் இயற்கையாகவே அதனை தடுக்க வாயில் ஏலக்காயை போட்டு மென்று சாப்பிடலாம்.
ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்

ஏலக்காய் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். செரிமானத்தை சீராக்குவதற்கும், ரத்த சர்க்கரை அளவையும் கணிசமாக குறைக்க ஆய்வு ஒன்றில் ஏலக்காயில் அதிக கார்போஹைட்ரேட் உணவுகளுடன் சேர்த்து எலிக்கு கொடுத்து பரிசோதனை செய்தது இந்த உணவை உட் கொள்ளாத எலியுடன் ஒப்பிடுகையில் உணவை உட்கொண்ட எலிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு குறைந்து இருப்பது தெரிய வந்தது.
நெஞ்செரிச்சலை குணப்படுத்தும்

செரிமானத்தை தூண்டும் நொதிகள் ஏலக்காயில் அதிகப்படியாக இருப்பதாலும் சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாலும் பொதுவாக ஏலக்காய் நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துகிறது. அதிக காரமான உணவுகளை உட்கொள்ளும் பொழுது ஏற்படும் நெஞ்செரிச்சலை ஏலக்காய் குணப்படுத்துகிறது. அதன் சாற்றை விழுங்கும்போது, நெஞ்செரிச்சல் குறைவதை நீங்கள் கண்கூடாக காணலாம். ஆனால், அளவுக்கு அதிகமாக நெஞ்செரிச்சலை சந்தித்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவதை சிறந்தது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

வெப்பமயமான விளைவு உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகிறது. அந்த தன்மை ஏலக்காய்க்கு இருக்கிறது. மற்றும் உடலின் வெப்பத்தை வெளிப்புறத்திற்கு செலுத்துவதன் மூலம் வியர்வையை உண்டாக்கும் காரணியாகவும் ஏலக்காய் செயல்படுகிறது. மேலும், ஏலக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மற்றும் ரத்த உரைதலையும் தடுத்து இதய நோய், மூலை நோய் மற்றும் நிரம்பியக்க சிதைவு நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

