தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் வர இருக்கிறது. இதனால், அரசியல் கட்சிகள் மிகவும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர். இதனிடையே எல்லா அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என பல பிளான்களை போட்டுள்ளனர்.
இதற்கிடையில், தேர்தல் பறக்கும் படை சோதனைகள் செய்த வண்ணம் உள்ளனர். அண்மையில் அதிமுக சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மு க ஸ்டாலினை விமர்சனம் செய்வதாக கூறி நயன்தாராவை வம்புக்கு இழுத்து உள்ளார் பிரபல அமைச்சர்.
அதாவது, அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்றார். கனவை சொன்னால், அவர் அதை நிறைவேற்றுவாராம். ஆம், எனக்கு நயன்தாரா வேண்டும். இவர் கனவை நிறைவேற்றுவாரா? நயன்தாராவை திருமணம் செய்து வையுங்கள் என யாராவது கேட்பார்கள். இவர் கனவை நிறைவேற்றுவாரா? ஆட்சியை போய்விட்டது ஆட்சி போன பிறகு வந்து கனவை நிறைவேற்றுவேன் என்கிறார்.

கடந்த ஐந்து வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என தெரியவில்லை என்றார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை குறித்து கொச்சைப்படுத்தும் வகையில், சி.வி சண்முகம் பேசி இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பெண்கள் அமைப்புகள் அரசியல் கட்சிகள் துறை பிரபலங்கள் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, இவரது பேச்சுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் சூழலில், அமைதியாக நயன்தாரா பதிலடி கொடுத்துள்ளார். அவரது Instagram Story-யில் “மழை எங்கு, யார் மீது விழுகிறோம் என்று பார்ப்பதில்லை. அதுபோல் உங்கள் அன்பு இருக்க வேண்டும்” என நயன்தாரா பதிவிட்டு உள்ளார். தன்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் அன்புடன் இருப்போம் என்பதை வலியுறுத்துவதாக நயன்தாராவின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


