ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது.
திருமணத்திற்கு டோலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். “விரோஷ்” என்று அழைக்கப்படும் இந்த ஜோடி தங்களது திருமணத்தை வெறும் ஆடம்பர நிகழ்வாக மட்டும் பார்க்காமல் தங்களது கலாச்சார வேர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு உன்னத நிகழ்வாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களது திருமணத்தில் அணிந்திருந்த உடை மற்றும் தங்க நகைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. திருமணம் முடிந்த சில வாரங்கள் கழித்து தற்போது, தான் போட்டோக்களை ராஷ்மிகா வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஹல்தி புகைப்படங்களை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். அது இணையதளத்தில் செம வைரலாகி வருகிறது.




