டெய்லி டிபனுக்கு இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிச்சு போச்சா, கவலையை விடுங்க. வித்தியாசமான தயிர் சட்னியை செய்து சாப்பிடுங்க, இந்த தயிர் சட்னி வழக்கமா சாப்பிடும் சட்டினியை விட கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.
விரும்பி விரும்பி சாப்பிடக் கூடிய வகையில் சுவையாக இருக்கும். இந்த தயிர் சட்னி சாதத்திற்கு அற்புதமான சைடு டிஷ்ஷா இருக்கும். முக்கியமா இதை செய்வதற்கு அதிக டைம் எடுத்துக்காது. எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 10 பல் பூண்டு
- 2 பச்சை மிளகாய்
- எட்டு சின்ன வெங்காயம்
- சிறிது கொத்தமல்லி
- கால் கப் கெட்டி தயிர்
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
- ஒரு டீஸ்பூன் மல்லித்தூள்
- சுவைக்கேற்ப உப்பு
தாளிப்பதற்கு (விருப்பம் இருந்தால்)
- இரண்டு டீஸ்பூன் எண்ணெய்
- அரை டீஸ்பூன் கடுகு
- அரை டீஸ்பூன் சீரகம்
- ஒரு கொத்து கருவேப்பிலை

செய்முறை
Step 1: முதலில் இடிக்கல்லில் 10 பல் பூண்டு மற்றும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில், உரித்து வைத்துள்ள எட்டு சின்ன வெங்காயத்தையும் நன்கு இடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து, சிறிது கொத்துமலையை சேர்த்து அரைக்க வேண்டும்.
Step 2: பிறகு அத்துடன் கால் கப் கெட்டியான தயிரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர், அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சத்தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
Step 3: அதன் பின்னர் அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டால், இடிச்ச தயிர் சட்னி தயார். ஒருவேளை உங்கள் வீட்டில் கேஸ் இருந்தால், அத்துடன் தாளிப்பை சேர்க்கலாம்.
Step 4: அதை தாளிப்பதற்கு ஒரு சிறிய வானொலியை அடுப்பில், வைத்து கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும். கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

