கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா. வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், சிறுத்தை, வீரம், பாகுபலி என பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து டாப் நடிகையாக இருந்தார்.

ஒரு கட்டத்தில், தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், படு கவர்ச்சியாக படுக்கையறை காட்சிகளில் வரம்பு மீறி நடித்திருந்தார். முன்னதாக, ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு அவர் ஆடிய டான்ஸ் தமன்னாவை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டது என்றே சொல்லலாம்.

அதனை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் மசாலா சாங் காக தமன்னா ஆடி வந்தார். வில்லியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக மாறியவர் தமன்னா. இவரை ரசிகர்கள் மில்க் பியூட்டி எனவும் கொண்டாடுகின்றனர். கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

முன்னதாக, சென்னையில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா அஜித் மற்றும் விஜய் குறித்து பேசி உள்ளார். அதாவது, அஜித்துடன் நான் பணியாற்றி இருக்கிறேன். எனக்கு அவர் சுடச்சுட இட்லி செய்து கொடுத்தார். அஜித் பக்கா பேமிலி மேன். ஆனால், விஜய் மிகவும் சிம்பிளான நபர் என்றும், பேச்செல்லாம் குறைவாக தான் பேசுவார். அவரை மாதிரி யாராலும் நடனமாட முடியாது. அவர் ரொம்பவே ஸ்வீட்டான நபர், என்று தெரிவித்தார். இவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

