Close Menu
    What's Hot

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»மக்கள் துணையுடன் திமுகவை அனுப்ப தயார்… அன்புமணி சூளுரை!
    தமிழ்நாடு

    மக்கள் துணையுடன் திமுகவை அனுப்ப தயார்… அன்புமணி சூளுரை!

    Prime ReporterBy Prime ReporterMarch 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The unruly DMK should not be in power for even a minute longer… Anbumani Kattam!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து, முடிவுகள் அன்றே தெரிந்துவிடும்.

    இதனிடையே அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்று வரும் நிலையில், திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என அன்புமணி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் , தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இந்தத் தேர்தலை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது.

    தமிழ்நாடு மிக மோசமான கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு ஆட்சியாளர்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோலாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது கஞ்சா இராஜ்ஜியம் என்று கூறும் அளவுக்கு மூலைக்கு மூலை கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களும் விற்கப்படுகின்றன. பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடவே முடியாது எனும் அளவுக்கு அவர்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவிட்டன.

    தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் தான் தழைத்தோங்கியுள்ளன. பணியாளர்களை நியமிப்பதில் ஊழல், சாலை அமைப்பதில் ஊழல், பாலம் கட்டுவதில் ஊழல், மணல் அள்ளுவதில் ஊழல், நெல் கொள்முதலில் ஊழல், மது வணிகத்தில் வரி ஏய்ப்பு ஊழல், மின்சாரம் கொள்முதலில் ஊழல், பணியிட மாற்றம் வழங்குவதில் ஊழல் என அனைத்திலும் ஊழல் தான். கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 6,00,00,00,00,000 ( ரூ. 6 லட்சம் கோடி) ஊழல் செய்து திமுக சாதனை படைத்திருக்கிறது.

    திமுக ஆட்சியை அகற்றுவதன் மூலம் தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான முன்னேற்றத்தைத் தர முடியும், பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்க முடியும், மது மற்றும் கஞ்சா போதையில்லா தமிழகத்தை உருவாக்க முடியும், உண்மையான விடுதலையை வழங்க முடியும். இதை உணர்ந்து இன்னும் 49 நாள்களில் மக்கள் துணையுடன் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உழைக்க பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்றுக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Anbumani CM Stalin DMK PMK Politics அரசியல் அன்புமணி திமுக அரசு பாமக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026

    6G புரட்சியில் இந்தியா: ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்காம் மெகா கூட்டணி ..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!

    April 7, 2026
    Don't Miss

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    2026 மேற்கு வங்கத் தேர்தலில் 91 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிரடி அதிகாரி இடமாற்றங்கள் குறித்த விரிவான தேர்தல் அறிக்கை.

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.