தமிழகத்தில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பம்பரம் சூழன்று பணியாற்றி வருகின்றனர்.
திமுக கூட்டணி, அதிமுக – பாஜக, நாதக, தவெக என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக பணிகளை மேற்கெண்டு வரும் நிலையில் அதிமுக கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சி தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான எஸ்ஆர் சேகர், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற செய்தி வரும் என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு வாக்குப்பதிவு – ஏப்ரல் 23, வாக்கு எண்ணிக்கை – மே 4, மே 4 அன்று காலை 9 மணி – தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக முன்னிலை
காலை 11 மணி – தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை. மதியம் 12 மணி – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது புகார்கள் மற்றும் அழுகுரல்கள் தொடக்கம்.

பகல் 1 மணி – ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகக் கூச்சல். மாலை 3 மணி – தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

