சினிமாவில் ஒரு சில நடிகைகள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலம் கச்சிதமாக நடித்து பின்னிபெடலெடுப்பர். அந்த வரிசையில் நடிகை ராதிகாவுக்கு தனியிடம் உண்டு. நடிகை ராதிகா, எம்ஆர் ராதா மகள் என்றாலும், நடிப்பில் அப்பனையே மிஞ்சும் அளவுக்கு நடிப்பார்.

சமீப காலமாக நடிகை ராதிகா ஹீரோக்களுக்கு அம்மா வேடத்தில் பின்னி எடுத்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில், உருவாகியுள்ள தாய் கிழவி படத்தில் ராதிகா, பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். முக்கியமாக வயதான தோற்றத்திற்காக அவர் மெனக்கெட்டு இருப்பது நிதர்சனமான உண்மை. மிரட்டும் தொனி, வட்டார பேச்சு என திமிர்த்தனமாக தாய் கிழவி நடந்து வருவதை பார்த்தாவே ஆச்சரியமூட்டுகிறது.

சிவகார்த்தகேயன் தயாரிக்க, சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படம் மக்களிடம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில், தற்போது வரை ரூபாய் 62 கோடி வரை வசூல் பேட்டை நடத்தி தமிழகத்தில் மட்டும் 46 கோடி ரூபாய் தாய்க்கிழவி திரைப்படம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கின்றனர். அதில், விஜய் சேதுபதியை கலாய்க்கும் வகையில் சீன் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக, பிக் பாஸில் இருந்து கமல்ஹாசன் வெளியேறிய பின் விஜய் சேதுபதி அவர் இடத்திற்கு வந்தது பற்றிய காட்சி தான் அது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோ இதோ.

