Close Menu
    What's Hot

    உலகச் சுகாதார தினம் 2026: “அறிவியலுடன் இணைவோம்; ஆரோக்கியத்தைக் காப்போம்”

    April 7, 2026

    54 ஆண்டுகால சாதனையை முறியடித்த நாசா: நிலவில் புதிய சரித்திரம்!

    April 7, 2026

    பி.காம் பட்டத்துடன் சர்வதேச வேலைவாய்ப்பு: ACCA முதல் CMA வரை – 2026 மெகா கரியர் கைடு..!

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»ஆரோக்கியம்»இந்த ஒரு மூலிகை டீ போதும்.. 14 நாட்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்களை ஓட ஓட விரட்டும்..!
    ஆரோக்கியம்

    இந்த ஒரு மூலிகை டீ போதும்.. 14 நாட்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்களை ஓட ஓட விரட்டும்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kidney stone UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக மக்களிடையே சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் அதை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கே கொடுக்கப்படுகின்றன. அப்படி சிறுநீரகங்களில் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை தான் சிறுநீரக கற்கள் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக கற்கள் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.

    kidney stone UTv

    Table of Contents

    • சிறுநீரக கற்கள் எதனால் வருகிறது?
    • சிறுகண்பீளை செடி டீ
    • சிறுகண்பீளை செடியின் நன்மைகள்

    அதில், ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சிறுநீரக கல் ஏற்படும் என்று ஆய்வுகளும் கூறுகிறது. சிறுநீரக கற்கள் எப்படி உருவாகிறது. சிறுநீரக கற்கள் என்பவை சிறுநீரில் உள்ள கெமிக்கலால் உருவாகும் ஒரு கடினமான கல்லாகும்.

    kidney stone UTv

    பொதுவாக, சிறுநீரகங்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும் போது சிறுநீர் படியாக கழிவுகளை வெளியேற்றுகின்றன. இதனால் சிறுநீரில் நிறைய கெமிக்கல்கள் இருக்கும். அதில் சில கெமிக்கல்கள் அதிகமாகவும், போதுமான நீர் இல்லாமல் இருந்தால் அந்த கெமிக்கல்கள் ஒட்டிக்கொண்டு கற்களாக உருவாகிறது.

    Sirukanpeelai UTv

    சிறுநீர் பாதையில் இவை படிந்து விடும். இந்த கற்கள் சிறுநீரக கற்கள் என்று அழைக்கப்படுகின்றன. மிகவும் பொதுவான கெமிக்கல்களான கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம், சிஸ்டைல் மற்றும் பாஸ்பேட் ஆகியவைதான் இந்த கற்கள் உருவாவதற்கு காரணமாக உள்ளன.

    kidney stone UTv

    சிறுநீரக கற்கள் எதனால் வருகிறது?

    நீரிழப்பு அதிகப்படியான அமிலம் சிறுநீரில் இருப்பது சிறுநீர் பாதை தொற்றுகள் மற்றும் சிறுநீரகங்களில் நச்சுக்கள் மற்றும் கழிவுகள் தேங்கி இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஒருவருக்கு சிறுநீர் கற்கள் இருந்தால், அதன் விளைவாக கடுமையான கீழ் முதுகும்பவலி, அடி வயிற்றுவலி, சிறுநீரக பாதையில் மிதமானது முதல் தீவிரமான வலியை அவர்கள் சந்திக்க நேரிடும்.

    kidney stone UTv

    இன்னும் சிலருக்கு வாந்தி, குமட்டல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, குளிர் அல்லது அதிகப்படியான வேர்வையை கூட சந்திக்க நேரிடும். இந்த அறிகுறிகள் சிறுநீர் கற்களின் அளவுகளைப் பொறுத்து மிதமாகவோ தீவிரமாகவோ இருக்கலாம். இப்படியான சிறுநீர் கற்களை கரைப்பதற்கு ஆயுர்வேதத்தில் அற்புதமான மூலிகை டீகள் உள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

    சிறுநீரக கற்களை இயற்கையாகவே கரைத்து வெளியேற்ற உதவும் ஒரு ஆயுர்வேத மூலிகைதான் சிறுகண்பீளை செடி. இந்த செடி ஒரு மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் பஞ்சு ஒட்டி வைத்தது போன்று அழகாக இருக்கும்.

    Sirukanpeelai UTv

    இதன் பூக்கள் இலைகள் மற்றும் அதன் வேர்களிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த சிறுகண்பீளை செடியை நாம் அனைவருமே பொங்கல் பண்டிகை காலத்தில் கண்டிப்பாக பார்த்திருப்போம். அது வேறு ஒன்றும் இல்லை அதுதான் காப்புச்செடி. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளில் வீட்டில் காப்பு கட்டும் போது ஆவாரம்பூ, வேப்பிலையுடன் பொடிப்பொடியான வெள்ளை நிற பூக்களை கொண்ட சிறுகண்பீளை செடியையும் வைத்துதான் காப்பு கட்டுவோம். இதனால், இந்த செடியை காப்பு செடி என்றும் கூறுவார்கள்.

    tea UTv

    சிறுகண்பீளை செடி டீ

    சிறுகண்பீளை செடியை வேரோடு புடுங்கி, நீரில் நன்கு கழுவி விட்டு அதன் பூக்கள் இலைகள் மற்றும் வேர் பகுதியை நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில், வைத்து ஒரு டம்ளர் அளவு வரை நன்றாக சுண்ட காய்சி இருக்க வேண்டும். பின்னர், அது வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அதை வடிகட்டி காலையில், எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

    tea UTv

    இப்படி வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது அதன் ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு முழுமையாக கிடைக்கின்றன. எத்தனை நாட்கள் இதனை குடிக்கலாம். சிறுநீரக கற்கள் கரைக்க சிறுகண்பீளை செடியை குடிப்பதாக இருந்தால் தொடர்ந்து 14 நாட்கள் குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடிப்பதாக இருந்தால், தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பின் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    சிறுகண்பீளை செடியின் நன்மைகள்

    Sirukanpeelai UTv

    சிறுகண்பீளை செடியானது சிறுநீரக கற்கள் பிரச்சனையால் சந்திக்கும் கடுமையான வயிற்று வலியும் முதுகு வலி போன்ற தீவிர அறிகுறிகளை குறைப்பது மட்டுமல்லாமல் சிறுநீரக கற்கள் இருந்தால் அவற்றை இயற்கையாக கரைத்து வெளியேற்ற உதவி புரியும். அதுவும் இந்த டீயை மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால், சிறுநீரக உறுப்பு ஆரோக்கியமாக செயல்படும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Ayurvedic Tea for Kidney Stones Ayurvedic Treatment for Kidney Stones Kidney Detox Herbal Drink Kidney Health Kidney Stone Remedy Kidney Stones Herbal Tea World Kidney Day Health Tips சிறுநீரக ஆரோக்கியம் சிறுநீரக கல் இயற்கை தீர்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதடுகளின் நிறம் மாறுகிறதா?.. ‘அந்த’ பாதிப்பாக கூட இருக்கலாம்..!

    April 6, 2026

    8 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருப்பவரா?.. சிகரெட்டை விட ஆபத்தானதா ‘சிட்டிங்’..!

    April 4, 2026

    தினமும் 4 சின்ன வெங்காயம்.. எப்படிச் சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?..

    April 2, 2026

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 1, 2026

    தினமும் ஒரு கீரை.. எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த கீரைகளை சாப்பிட வேண்டும்? முழு விவரம்..!

    March 31, 2026

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பி.காம் பட்டத்துடன் சர்வதேச வேலைவாய்ப்பு: ACCA முதல் CMA வரை – 2026 மெகா கரியர் கைடு..!

    April 7, 2026

    54 ஆண்டுகால சாதனையை முறியடித்த நாசா: நிலவில் புதிய சரித்திரம்!

    April 7, 2026

    ஏப்ரல் 7: திடீர் பணவரவு மற்றும் தொழில் லாபம் யாருக்கு?.. இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 7, 2026

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    April 6, 2026

    பதற்றங்களுக்கு இடையே சாதனை: ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த 9-வது இந்தியக் கப்பல் ‘கிரீன் ஆஷா’!

    April 6, 2026
    Don't Miss

    உலகச் சுகாதார தினம் 2026: “அறிவியலுடன் இணைவோம்; ஆரோக்கியத்தைக் காப்போம்”

    April 7, 2026

    2026 உலகச் சுகாதார தினத்தை முன்னிட்டு, “அறிவியலுடன் இணைவோம்; ஆரோக்கியத்தைக் காப்போம்” என்ற மையக்கருத்தின் கீழ் டிஜிட்டல் சுகாதார புரட்சி மற்றும் மனநல உரிமைகள் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய அறிவிப்புகள்.

    54 ஆண்டுகால சாதனையை முறியடித்த நாசா: நிலவில் புதிய சரித்திரம்!

    April 7, 2026

    பி.காம் பட்டத்துடன் சர்வதேச வேலைவாய்ப்பு: ACCA முதல் CMA வரை – 2026 மெகா கரியர் கைடு..!

    April 7, 2026

    ஏப்ரல் 7: திடீர் பணவரவு மற்றும் தொழில் லாபம் யாருக்கு?.. இன்றைய முழுமையான ராசிபலன்..!

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.